கொரிந்தியர், திருத்துதலைக் கொண்ட புத்தகம் 57-0414 1. காலை வணக்கம், நண்பர்களே! இக்காலையில் எனக்கு தொண்டை சற்று கரகரப்பாயிருந்தது என்றும், எழுப்புதல் கூட்டங்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், நான் சகோதரன் நெவில் அவர்களிடம் கூறினேன். எனவே நான் இக்காலையில் உங்களுக்கு பிரசங்கிக்க முயற்சிக்க மாட்டேன், ஏனென்றால் எனக்கு தொண்டை மிகவும் கரகரப்பாயுள்ளது. நாம் ஒரு சிறு குழுவாக இங்கு உள்ளோம். எனவே நான் ஒருக்கால் ஒரு சிறு ஞாயிறு வேதபாட பள்ளிக்குரிய ஒரு பாடத்தை எடுத்துவிட்டு, அதன் பின்னர் அவரை சற்று நேரம் பிரசங்கிக்க அனுமதிக்கலாம் என்று உள்ளேன். ஆகையால் நாம்…நான் பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு நாம் பேசக்கூடிய ஏதோ ஒரு காரியத்தை, அதாவது இங்கே வேதாகமத்திலிருந்து ஒரு சிறு பாடப் பகுதியை எடுத்துப் பேச உள்ளேன். ஒருக்கால் கர்த்தர் அதிலிருந்து ஏதோ ஒரு காரியத்தை நமக்குத் தருவார். இப்பொழுது, அவர் நமக்கு அளவுக்கு அதிகமாகவே நன்மையாயும், அளவுக்கதிகமாகவே நல்லவராகவும் இருந்து வருகிறார். 2 நாம் களைப்புற்றிருக்கிறோம். கடந்த இரவு நான் சற்று காலதாமதமாகவே உறங்கச் சென்றேன். நான்—நான் சென்ற பிறகு…நான் உள்ளே சென்றது முதற்கொண்டு அநேக தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமாயிருந்தன. ஆகையால் என்னுடைய குட்டிப்பையன் ஒரு கைப்பிடி நிறைய கண்ணாடி குமிழ்மணிகளை வைத்துக்கொண்டு, அவைகளை வாயில் போட்டு மென்று தின்றுவிட்டான். அதாவது அவைகளை விழுங்கிவிட்டதை நான் கவனிக்க நேர்ந்தது. ஆகவே நாங்கள் அவனைப் பற்றிப்பிடித்து, அவனுடைய சிறிய வாயைக் கழுவினோம். எனவே அதன் பின்னர் நாங்கள் இரவின் பெரும்பகுதியை அவனோடு கழிக்க வேண்டியிருந்தபடியால், நான் இக்காலையில் ஒருவிதமாக களைப்புற்றிருக்கிறேன். 3 நான் பன்னிரெண்டு மணிக்கு உடனடியாக கென்டக்கிக்குச் செல்ல வேண்டும். கென்டக்கியில் சில நேர்முக சந்திப்புகளுக்காக அங்கே செல்ல வேண்டும். அதன் பின்னர் வருகின்ற வாரத்தில் நம்முடைய கூட்டம் தொடங்குகிறது. 4 இப்பொழுது என்னால் முடிந்தால், ஒரு சில இரவுகள் பேசுவதைக் குறித்து நான் முயற்சிக்க விரும்புகிறேன். என்னுடைய…எனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கவில்லை. என்னுடைய குரல் மங்கிப்போகுமளவிற்கு நான் அவ்வளவாய் பிரசங்கித்திருக்கிறேன். பாருங்கள், நீங்கள் பாருங்கள். இது சரியாக நான்கு மாதங்களாக இருந்து வருகிறது. ஆகவே அதன்பின்னர், அதற்கு அடுத்தது, அதன்பின்னர் நான் கனடாவிற்குச் செல்கிறேன். அதன்பின்னர் மீண்டும் நம்முடைய வழக்கமான கூட்டங்களுக்கும், கடல் கடந்து நடைபெறும் கூட்டங்களுக்காகவும் திரும்பி வருவேன். 5 இப்பொழுது, நான் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், அங்கே அமர்ந்து கொண்டு, லியோ மற்றும் ஜீன் என்பவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். நாம் இக்காலை இங்கே உபயோகிக்கும்படியான ஒரு வேத வாக்கியத்தைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது…முதலாவது, நான் அப்படியே போய் அங்கே ஒரு நிமிடம் அமரப்போவதாயிருந்தேன். ஏனென்றால் நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். எனவே நான், “அங்கே பின்னால் உள்ள அறையில் நான் சென்று அமர்வது சரியாகத் தோன்றவில்லை, ஏனென்றால் சபையோர் இங்கிருக்கின்றனர். ஏன்? கர்த்தர் அங்கு திரும்பி வராமல் போகலாம். எனவே அவர் இருந்த இந்த இடத்திற்கு நான் வரவேண்டும்” என்று எண்ணிக்கொண்டேன். 6 ஆகவே, இக்காலையில் இங்கே நான் அழைத்துக் கொண்டு வரப்பட்ட காரணங்களில் ஒன்றை நான் புரிந்து கொண்டேன் என்று நான் நம்புகிறேன். சகோதரன் லிட்டில் ஃபீல்டு இங்கே இருக்கிறார். ஆம். அவர் ஆராதனைக்குப் பின் ஒரு நிமிடம் என்னைக் காண விரும்பினார். சகோதரன் லிட்டில் ஃபீல்டு டென்னஸியிலிருந்து இங்கு வந்துள்ளார். அங்கு எங்களுக்குப் பெரிய, அங்கே பெரிய கூட்டம் இருந்தது, அதாவது அது அண்மையில் அங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூட உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. என்னால் சரியாக அந்தப் பட்டிணத்தின் பெயரை ஞாபகப்படுத்திக் கூற முடியவில்லை. சகோதரன் லிட்டில் ஃபீல்டு எங்கே இருக்கிறார்? [சகோதரன் லிட்டில் ஃபீல்டு, “கிளீவ்லேண்ட்” என்று கூறுகிறார்.—ஆசி.] கிளீவ்லேண்ட் [“டென்னஸி”.] கிளிவ்லேண்ட், டென்னஸி. 7 எனவே எங்களுக்கு அங்கு ஓர் அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. அவர்…அங்கு உள்ளே என்னைக் கூப்பிட்டு விசாரிக்கும்படி வந்து கொண்டிருந்தபோது, நான் இக்காலை இங்கு இருப்பேன் என்று அவரிடம் கூறினேன். நாங்கள் இக்காலையில் வேறெங்கோ செல்லப் போவதாயிருந்தோம். அதன்பின்னர் நான் சில நண்பர்களைச் சந்திக்க விரும்பினேன். பிரசங்கிக்க அல்ல; வெறுமனே சந்திக்கவே. ஏனென்றால் நான் அவர்களைக் காண்பதாக வாக்களித்திருந்தேன். அப்பொழுது சகோதரன் லிட்டில் ஃபீல்டு இங்கே இருந்தார் மற்றும் சகோதரன் பீலேண்ட் அவர்களும் மற்றவர்களும் இருந்தனர். எனவே நான் இக்காலையில் அருகில் வந்து அவர்களைக் காண விரும்பினேன். நான் தற்செயலாக, உள்ளே வந்த காரணம் அதுவேதான். 8 ஆகையால் இப்பொழுது, கொரிந்தியர் புத்தகத்தில் கிட்டத்தட்ட சரியாக 10-ம் அதிகாரம் முதல் நான்கு அல்லது ஐந்து வசனங்கள். நாம் அதன்பேரில் ஒரு சில நிமிடங்கள் சற்று தியானிப்போமாக. அதன் பின்னர் நம்முடைய சகோதரனுக்கு பிரசங்கிக்க நேரம் உண்டாயிருக்கும். இப்பொழுது முதலாவது அவருடைய பிரசன்னத்தில் நாம் நம்முடைய தலைகளைச் சற்று தாழ்த்துவோமாக. 9 ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, ஜீவியத்தின் நன்மையான காரியங்களுக்காக நாங்கள் இந்நாளில் உமக்கு நன்றி செலுத்தும்படியாக உண்மையாகவே நன்றியுள்ள இருதயங்களோடு உமக்கு முன்பாக தாழ்மையாய் பணிகிறோம். ஜீவியமானதுதானே ஒரு பெரிய போராட்டமாயுள்ளது என்பதைத் தெளிவாக உணருகிறோம். நாங்கள் ஒரு வழியில் இதை உடையவர்களாயிராவிட்டால், அப்பொழுது நாங்கள் வேறு வழியில் இருப்போம். ஆனால் என்றோ ஒரு மகிமையின் நாளில் யுத்தமானது முடிவுறும். அப்பொழுது நாங்கள் இயேசுவை நேசித்தது முதற்கொண்டு, அவரோடு நெருங்கினது முதற்கொண்டு, அவருக்கு ஒரு உறவினரானது முதற்கொண்டு எதிர்நோக்கியிருக்கிற அவரைக் காண்போம். என்றோ ஒரு நாளில் நாங்கள் அவரைக் காண்போம் என்று அறிந்து கொள்வதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். 10 இப்பொழுது அன்று ஒரு பண்டைய கர்வாலி மரத்தண்டை ஆபிரகாமுக்கு உண்டாயிருந்த ஆறுதலைப் போலவே, அவன் அங்கே அமர்ந்திருந்து காத்திருந்தபோது, தேவனும் இரண்டு தூதர்களும் வந்து அவனிடத்தில் பேசினது போன்றே, நாங்கள் வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொண்டிருக்கையில், கர்த்தாவே உம்முடைய வார்த்தையினூடாக நீர் வந்து இக்காலையில் எங்களிடத்தில், எங்களுடைய இருதயத்தில் பேசும்படியாக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 11 எங்களுடைய அருமையான, அன்புக்குரியப் போதகரை ஆசீர்வதியும். கர்த்தாவே நீர் அவருக்கு பெலனையும், தைரியத்தையும் தரவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் இந்தச் சிறிய சபையையும், உதவிக்காரர்களையும், இங்கு சம்மந்தப்பட்டுள்ள எல்லோரையும், இங்கு வருகிற அனைவரையும், இங்கு மட்டுமின்றி, மற்ற இடங்களிலும் உள்ள உம்முடைய உலகளாவிய சபையையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். 12 இந்த ஆராதனையில் இக்காலையில் எங்களோடு வருகைப் புரிந்துள்ள எங்களுடைய சகோதரர்களை ஆசீர்வதியும். நீரே அவர்களோடு இருந்து, அவர்களைத் தாங்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும், உம்முடைய வார்த்தையின் மூலமாக எங்களிடத்தில் பேசும். நாங்கள் இதைக் கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 13 இக்காலையில் இங்கே சகோதரன் கோட்ஸ் (Coats) அவர்கள் அமர்ந்து கொண்டிருப்பதை வேறு யாரோ என்று நான் தவறாக எண்ணிக் கொள்ள முடியாது. அன்றொரு இரவு புற்று நோய்க்காக அவருக்கு…ஓய்வுபெற்ற இராணுவப்படை வீரர்களுக்கான மருத்துவ மனையில் ஜெபம் செய்ய வேண்டியதாயிருந்தது. எனவே இக்காலையில் சகோதரன் மற்றும் சகோதரி கோட்ஸ் அவர்களே, நாங்கள் உங்களை இங்கு உள்ளே காண்பதற்கு மகிழ்ச்சியடைகிறோம். 14 இப்பொழுது, கொரிந்தியரின் புத்தகம் 10-ம் அதிகாரத்தில், இந்தக் கொரிந்தியரின் புத்தகம் திருத்துதலைக் கொண்ட ஒரு புத்தகமாக உள்ளது. நாம் கொரிந்தியரின் புத்தகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் உள்ள சபைகள் எல்லாவற்றிலுமே பிரச்சனைகளோடு காணப்பட்டிருந்த தலைவர்களைக் கொண்டிருந்த ஒரே சபையாய் தென்படுகிறது இதுவேயாகும். ஆனால் கொரிந்தியர்கள் எப்பொழுதுமே தொல்லையில் இருந்து வந்தனர். பவுல், அவர்களுக்கு மத்தியில் வரும்போது, ஒருவன் அந்நிய பாஷை பேசுதலை உடையவனாயும், ஒருவன் ஒரு சங்கீதத்தை உடையவனாயும், ஒருவன் உள்ளெழுச்சி மற்றும் ஓர் உணர்ச்சி வசப்படுதலை உடையவனாயும் இருந்து கொண்டிருந்தனர். எனவே அவன் எப்பொழுதுமே இந்தக் கொரிந்தியர்களோடு தொல்லைக் கொண்டவனாயிருந்து, அதே சமயத்தில் அவர்களைத் தொடர்ந்து சரிப்படுத்திக் கொண்டிருந்தான். 15 நாம் கவனிப்போமேயானால், அவனால் ஆழமான காரியங்களைக் கொரிந்தியர்களுக்கு போதிக்க முடியவில்லை. அவர்கள் வெறுமனே, ஒரு—ஒரு—ஒரு குழந்தைத்தனமான முறையில் இருந்தனர். அவர்கள்—அவர்களிடத்தில்…அவன் எபேசியர்களுக்கு போதித்த செய்திகளைப் போன்றும், அவன் ரோமர்களுக்கு போதித்ததைப் போன்றும், இவர்களிடத்திற்கு மகத்தான, ஆழமானவைகளைக் கொண்டுசெல்ல முடியவில்லை. அவர்களுக்கு ஆழமான காரியங்களைப் போதிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாததாயிருந்தது. அவர்கள்—அவர்களோ சிறு உணர்ச்சி வசப்படுதல்களின் பேரில், அதைப்போன்ற சிறு காரியங்களின் பேரில் அதிகமாக சார்ந்திருந்தனர். அதாவது வெறுமனே, “நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் அதைப் பெற்றுக் கொண்டேன்! எனக்கு உண்டான ஒரு—ஒரு வெளிப்பாட்டையே நான்—நான் உடையவனாயிருக்கிறேனே. நான் ஒரு சங்கீதத்தை உடையவனாய் இருக்கிறேன். நான் ஒரு தீர்க்கதரிசனத்தை உடைய வனாயிருக்கிறேன்” என்பதில் பேரில் சார்ந்திருந்து வந்தனர். 16 பவுலோ, “இந்த எல்லா காரியங்களும் தவறிப்போகும்” என்றான். புரிகின்றதா? அவைகள் ஒவ்வொன்றுமே, அவைகள் அதிக அளவில் நம்பப்படக்கூடியவைகளாக இருக்கவில்லை. ஆகவே, ஆனாலும் அவன் சபைக்கு கற்றுணர்த்த முயற்சித்துக் கொண்டிருந்த அந்த நங்கூரம் என்னவென்றால், நாம் கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், நாம் உணர்ச்சிவசப்படுதல்களின் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கக் கூடாது என்பதுமேயாகும். நாம் வெளிப்பாடுகளின் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடாது என்பதுமேயாகும். நாம் இந்தக் காரியங்களின் பேரில் நம்பிக்கைக் கொண்டிருக்கக் கூடாது. நாம் கிறிஸ்துவுக்குள் மாத்திரமே நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். நாம் அங்கிருந்து வெளியே செல்வதும் விசுவாசத்தின் மூலமேயாகும். வெறுமனே… 17 எபேசியர்கள் எவ்வாறு உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவனுடைய சுவீகார புத்திரராகும்படிக்கு முன்குறிக்கப்பட்டிருந்தனர் என்பதை பவுலால் அவர்களுக்கு அங்கே போதிக்க முடிந்தது என்பதை நாம் கவனிக்கிறோம். இப்பொழுது அவனால்…கொரிந்தியர்களோ அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே…அவர்கள் சிறு உள்ளுணர்வை அல்லது ஏதோ ஒன்றை, சிறு உணர்ச்சிவசப்படுதலை, இந்த, அந்த, மற்ற ஒன்று என்பதையே உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அதன்பேரிலேயே சார்ந்திருந்தனர். எனவே அவனால் ஆழமான காரியங்களை அவர்களுக்கு போதிக்க முடியவில்லை. 18 ஆகையால் அது ஒரு மகத்தானது என்றே…நான் கருதுகிறேன் உங்களால் ஜனங்களுக்கு ஆழமான காரியங்களைப் போதிக்க முடியும்போது, பரிசுத்த ஆவியானவர் இந்த மகத்தான சத்தியங்களைப் பிணைத்து இணைக்க முடியும்போது, ஜனங்களுடைய இருதயங்களுக்குள்ளாக அது நங்கூரமிடப்படும்போது, அப்பொழுதே அவர்கள் எந்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளுகின்றனர். உணர்ச்சிவசபடுதல் அல்லது உணர்ச்சிவசப்படாமலிருத்தல், தீர்க்கதரிசனம் அல்லது தீர்க்கதரிசனமில்லாதிருத்தல் மற்றும் அது என்னவாயிருந்தாலும், என்னவாயிருந்தாலும் சரி. எனவே நாம்…இல்லை…இப்பொழுது நினைவிருக்கட்டும் நாம்…இருக்கவில்லை…தேவன் தீர்க்கதரிசனத்தின் மூலமாகவோ மற்றும் அதைப் போன்ற காரியங்களின் மூலமாகவோ ஈடுபடுகிறதில்லை என்று கூற நான் முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாம் அதின்பேரில் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. நீங்கள் பாருங்கள், நாம் அதைப் பார்க்கிலும் ஆழமான ஒன்றைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவன், “தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்து போகும், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்…” என்றான். 19 இந்த எல்லா உணர்ச்சிவசப்படுதல்களையும் அந்தக் கொரிந்தியர் உடையவர்களாயிருந்தனர். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு அவைகளில் ஒன்றுகூட சாட்சியாயிருக்கவில்லை. அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு அவைகளில் ஒன்றுகூட சாட்சியாயிருக்கவில்லை. இல்லையே…உங்களால் சத்தமிட முடிந்தாலும், உங்களால் அந்நிய பாஷைகளில் பேச முடிந்தாலும், உங்களால் தீர்க்கதரிசினமுரைக்க முடிந்தாலும், உங்களால் வியாதியஸ்தரை சுகப்படுத்த முடிந்தாலும், உங்களால் அந்நிய பாஷைகளுக்கு வியாக்கியானம்பண்ண முடிந்தாலும், நீங்கள் ஞானத்தை உடையவர்களாயிருந்தாலும், நீங்கள் அறிவை உடையவர்களாயிருந்தாலும் அவைகளில் ஒன்றுகூட நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்துகிறதில்லை; அவைகளில் ஒன்றுகூட பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் அவைகள் ஒவ்வொன்றையும் உடையவர்களாயிருந்தாலும் இழக்கப்படக்கூடும். பாருங்கள், பவுல் 1 கொரிந்தியர் 13ல், “நான் ஒன்றுமில்லை” என்றான். 20 ஆனால், நீங்கள் அன்புடையவர்களாயிருக்கும்போது, அது நங்கூரமாயுள்ளதே! இக்காலையில் என்னுடைய மனைவி விழித்து எழும்புவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே நான் விழித்தெழுந்துவிட்டேன். அப்பொழுது தேவன் நம்முடைய சபையை அன்பின் பிணைப்புகளால் எப்படி சேர்த்துக் கட்டுகிறார் என்றும், அது எப்படி இருக்க வேண்டும் என்பதையுங் குறித்த ஒரு மகத்தான காரியமொன்றை கர்த்தர் எனக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். ஒரு மனிதன் மீண்டும் பிறக்காமல் இரட்சிக்கப்படுவதற்கு வேறெந்த வழியும் கிடையாது. தேவனுக்கு சித்தமானால் வருகின்றதான இந்த வாரத்தில் அதன் பேரில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். அது என்னுடைய இருதயத்தில் அப்படியே உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒருக்கால் கர்த்தர் அதன் பேரில் ஒரு செய்தியை எனக்குத் தரலாம். 21 இப்பொழுது, இந்தக் காலையில் இந்தச் செய்தி, இது என்னுடைய இருதயத்தில் உண்டானபோது, இது ஓர் எச்சரிப்பின் செய்தியாயிருக்கிறது. அப்பொழுது பவுல் அந்தக் கொரிந்தியரை எச்சரித்துக் கொண்டிருந்ததுபோல ஒருக்கால் நாமும் இந்த எச்சரிப்பை ஜனங்களண்டை கொண்டு சென்றால் நலமாயிருக்குமே என்று நான் எண்ணினேன். நாம் இந்த எச்சரிப்பை ஜனங்களண்டை கொண்டு செல்ல முடிந்தால் நலமாயிருக்கும். இப்பொழுது நாம் ஓர் எழுப்புதலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மற்றும் நாம் சோதிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு சோதனையின் நேரத்தில் இருக்கிறோம் என்பதையும் அறிந்துள்ளோம். இப்பொழுது பவுல் இவ்வாறு கூறியுள்ளான்: இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 22 இப்பொழுது தேவன் இஸ்ரவேலரை வனாந்திரத்திலிருந்து, அவரை சேவிக்கும்படிக்கு வனாந்திரத்திற்குள் கொண்டு வந்து, அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்லும்படிக்கே வெளியே கொண்டு வந்தார் என்பதை புரிந்து கொள்ளும்படி அவன் அவர்களுக்குக் கூறிக் கொண்டிருந்தான். அவர்களோ…அவன் அங்கே இதை ஒரு திருஷ்டாந்தமாக அமைத்து காண்பிக்கிறான். அதாவது நாம் எல்லா மூலகாரியங்களுக்கும், எல்லா பிரமாண சடங்கு முறைகளுக்கும் மற்றும் கட்டளை முறைகளுக்குள்ளும் கொண்டு வரப்பட்டது போன்றே அவர்களும் கொண்டு வரப்பட்டிருந்தனர். நம்முடைய பாடத்தில் நாம் சற்று கீழ்நோக்கிச் சென்றால், அவர்களில் அநேகர் கவிழ்க்கப்பட்டுப் போனார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லா பிரமாண சடங்கு முறைகளையும் மற்றும் தேவன் செய்ய கட்டளையிட்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முடிந்த போதிலும், அவர்களுடைய இருதயமோ தேவனோடு சரியாயிருக்கவில்லை. 23 இப்பொழுது நம்மால் அனேகக் காரியங்களைச் செய்ய முடிகிறது. நம்மால் இராபோஜனம் எடுக்க முடிகிறது. நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட முடியும். நம்மால்—நம்மால் சபைக்கு வரமுடியும். நம்முடைய பெயர்களைப் புத்தகங்களில் பதிவு செய்திருக்க முடியும் அல்லது நம்மால் இருக்க முடிந்தளவு மரியாதையாயும், பயபக்தியாயும் இருக்க முடிந்தும், அதே சமயத்தில் இழக்கப்படமுடியும். அது ஒரு பயபக்திக்குரிய எச்சரிப்பாயிருக்கிறது. ஆவியானது பொழியப்படும்போது நம்மால்…அப்படியே களிகூரமுடியும். ஒரு கூட்டத்தில் வார்த்தையானது பிரசங்கிக்கப்படும்போது, நம்முடைய ஆத்துமாக்கள் வார்த்தையினால் களிகூர்ந்தும், நாம் இழக்கப்படக்கூடும். 24 “மழையானது நீதியுள்ளவர்கள்மேலும், அநீதியுள்ளவர்கள்மேலும் பொழிகிறது”. கோதுமையை வளரச்செய்கிற அதே மழையே களையையும் வளரச்செய்கிறது. பாருங்கள், அது உற்பத்திப்பொருளின் சுபாவமாயிருக்கிறது. நாம் என்னவாயிருக்கிறோம் என்பதை கூறுவது அதினுடைய சுபாவமாயிருக்கிறது. ஆகையால் அது நமக்குள் இருக்கிற சுபாவமாய் இருக்கிறது. அதுவே நாம் என்னவாயிருக்கிறோம் என்பதைக் கூறுகிறது. புரிகின்றதா? இல்லையெனில்… 25 நாம் ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஒரு காரியத்தையும் நம்முடைய கரங்களைக் கொண்டு செய்யாத அளவிற்கு மிகவும் பயபக்தியுள்ளவர்களாயிருக்கலாம். நாம் நம்முடைய ஆடைகளில் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு தையலும்கூட போடாதவர்களாயிருக்கலாம். நாம் ஞாயிற்றுக்கிழமையில் ஆகாரத்தை வாங்குவது நேர்மையாய் காணப்படவில்லையென்ற உணர்வையும்கூட கொண்டிருக்கலாம். நாம் மிகுந்த பக்தியுள்ளவர்களாயும், மிகுந்த கடமையுணர்வை பேணுகிறவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நாம் தேவனுடைய ஆவியில் சரியாக மீண்டும் பிறக்கவில்லையென்றால், நாம் வீணாய் ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். 26 ஆகையால், இப்பொழுது இது மிகவும் கண்டிப்பானதாயுள்ளது. எனவே நாம் அதை உண்மையாகவே கண்டறியவும், சத்தியத்தை அறிந்து கொள்ளவுமே விரும்புகிறோம். ஏனென்றால் நாம் இதிலே இரண்டாம் தருணத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது நினைவிருக்கட்டும். இதுவே இதற்கான ஒரே தருணமாய் உள்ளது. ஆகையால் நீங்கள் உண்மையாகவே நிச்சயமுடையவர்களாயிருப்பதே மேலானதாகும். இப்பொழுது, கவனியுங்கள், “சகோதரரே நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை”. 27 இப்பொழுது, இந்தக் கொரிந்தியரைக் குறித்து நான் முதல் இடத்தில் என்னக் கூறினேன்? அவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சிவசப்படுதலின் பேரில் தங்களுடைய நித்திய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். பவுல் கூறினான். வெறுமனே…அங்கே, “நான் உங்கள் மத்தியில் வந்திருக்கும்போது, ஒருவன் இதை உடையவன், ஒருவன் அதை உடையவன். ஒன்று—ஒன்று…என்று கூறுகின்றனர்” என்றான். இப்பொழுது…கூறினதோ எல்லாமே…அவையாவுமே சரிதான். நாங்கள் அதற்கு எதிராக ஒன்றையும் கூறவில்லை. ஆனால் இன்னமும் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதோ அதைக் குறித்ததல்ல. புரிகின்றதா? அது இதுவல்ல. 28 நான் முதலில் மனமாற்றமடைந்தபோது, எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது நான் ஆவியின் கிரியை நடப்பித்தலைக் காணத் துவங்கினேன். எப்படியோ யாரோ ஒருவர் அந்த உண்மையான, அசலான பரிசுத்த ஆவியை அப்பேற்பட்ட ஒரு வழியில் இருந்து போலியாக பாவனைச் செய்ய முடிந்ததைக் காணத் துவங்கினேன்…ஏன், அப்பொழுது அதில் எது தவறானது என்றும், எது சரியானது என்றும் கூற இயலாததாயிருந்தது. 29 எனக்கு தெரிந்த ஒரு மனிதனை நான்…ஒரு பகுத்தறிதலின் மூலம் கண்டேன். அந்த மனிதன் மற்றொரு மனிதனுடைய மனைவியோடு வாழ்ந்து கொண்டிருந்ததை நான் கண்டேன். இதோ அவனும் அங்கே நின்றுகொண்டு அந்நிய பாஷைகளைப் பேசிக்கொண்டு, வியாக்கியானித்துக்கொண்டு மற்றும் ஒவ்வொரு காரியத்தைச் செய்துகொண்டு, செய்திகளையும் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அது…நான் மற்றொரு மனிதனை ஓர் இடத்தில் சந்தித்து, அங்கே ஒரு சில நிமிடங்கள் அவனோடு பேசினேன், அவன் ஒரு உண்மையான, அசலான கிறிஸ்தவன். 30 அப்பொழுது நானோ, “எப்படி அந்த ஆவியானது, அங்கே நான்…இருக்க முடியும்?” என்று எண்ணினேன். அப்பொழுதுதான் நான் அதை முதன் முறையாக பெந்தெகோஸ்தே சபையில் கண்டேன். அது இந்தியானாவிலுள்ள மிஷவாக்கா என்ற இடத்தில் இருந்தது. எனவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அது நிச்சயமாகவே…நான் முதலில் அங்கிருந்த ஒரு சில மணி நேரங்களில், நான் தூதர்கள் மத்தியில் இருந்ததாக எண்ணினேன். இந்த இரண்டு மனிதர்களில் ஒருவன் ஒரு செய்தியை அளிக்க, மற்றொருவன் வியாக்கியானித்ததைக் கண்டேன். 31 நான் அதற்கு முன்பு அதைப்போன்று அந்நிய பாஷைகளில் பேசுவதைக் கேட்டதேயில்லை. எனவே நான் அந்த ஆவிகளையும், அவைகள் எப்படிக் கிரியை செய்தன என்பதையும் கவனித்தேன். அப்பொழுது நான், “ஓ, என்னே! ஏன், மகத்தான ஆயிர வருட அரசாட்சி துவங்கியுள்ளது” என்றே எண்ணிக்கொண்டேன். அதன் பின்னர் வெளியில் அவர்களில் ஒருவரை சந்தித்துப் பேசும்படியான ஒரு தருணம் எனக்கு உண்டானபோதோ, அப்பொழுது அவன் எதினால் உண்டானவன் என்றும், மற்றவன் அவ்வளவு பொல்லாங்கானவனாயிருந்தான் என்றும் கூறமுடிந்தது. 32 பின்னர் அந்த இரவு, நான் அவர்களை மீண்டும் கவனித்தேன். அப்பொழுது நான், “ஓ, நான் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். இது எப்படி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே” என்று எண்ணினேன். அதன் பின்னர் நான் அந்தக் காரியங்கள் வேதாகமத்தில் இருந்ததைக் கண்டேன். ஆனால் இதோ ஒருவன் தேவனுடைய ஆவியை உடையவனாயிராமல் அதைச் செய்து கொண்டிருந்தான். மற்றவனோ தேவனுடைய ஆவியி உடையவனாயிருந்து அதைச் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது நான் முற்றிலும் குழப்பமடைந்திருந்தேன். பின்னர் அந்த முழு காரியமும் அப்படியே போகும்படிக்கு விட்டுவிட்டேன். 33 வருடங்கள் கழித்து, வெள்ளப்பெருக்கு முடிவுற்ற பிறகு நான் கிரீன் மில் என்ற இடத்திற்கு செல்கிற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திரு.ஐஸ்லர் (Isler) என்பவர், மாநில சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர், இங்கே சபைக்கு வருகிறவராயிருந்து வந்தவர். அப்பொழுது அவர் என்னை அந்த வீதியில் சந்தித்து, தன்னுடைய கரங்களை அவர் என்மீது போட்டு, “பில்லி, இப்பொழுது கிறிஸ்து உனக்கு என்னவாக பொருள்படுகிறார்?” என்று கேட்டார். அப்பொழுதோ என்னுடைய தகப்பனார் மரித்துப் போய்விட்டிருந்தார். என்னுடைய மனைவியும் மரித்துப் போய்விட்டிருந்தாள். என்னுடைய குழந்தையும் மரித்துப் போயிருந்தது. அப்பொழுது நான்… எனவே, “அவர் என்னவாக பொருள்படுகிறார்?” என்று கேட்டார். 34 அப்பொழுது நான், “திரு.ஐஸ்லர் அவர்களே, அவர் எனக்கு ஜீவனைப் பார்க்கிலும் மேலானவராகவே கருதப்படுகிறார்” என்றேன். மேலும் நான், “எனக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்து என்னுடைய இருதயத்திற்குள் வந்தார். அப்பொழுது எனக்கு—எனக்கு…அது என்னைப் பார்க்கிலும் மேலானதாக மாறிவிட்டதாயிருக்கிறது. அது அப்படியே ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளதாயுள்ளது. அது நான் பக்தியாயிருந்தேன் என்ற காரணத்தினால் அல்ல. அது அதினால் அப்படி இருக்கவில்லை. அது கிருபையினூடாக எனக்காக தேவன் செய்த ஏதோ ஒரு காரியமாயுள்ளது” என்று கூறினேன். மேலும் தொடர்ந்து நான், “அவர் என்னை கொன்று போட்டாலும், நான் அவர் மேல் மாறாமல் நம்பிக்கையாயிருப்பேன். நான் பாதாளத்தில் இருந்தாலும், அங்கு அன்பு என்ற அப்படிப்பட்ட ஓன்று பாதாளத்தில் உண்டாயிருந்தால், நான் அப்பொழுதும் அவரை நேசிப்பேன். அவ்வளவுதான். அது இங்கே உள்ளே ஏதோ ஒரு காரியமாயுள்ளது. அவர் செம்மையாயிருக்கிறார். நான் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு தண்டனைக்கும் நான் தகுதி பெற்றவன். நீங்களும் அதேவிதமாகவே இருக்கிறீர்கள். ஆனால் அந்த நங்கூரம், அந்த ஏதோ ஒரு காரியம், தேவ அன்பின் அந்த நங்கூரம், அது மானிட இருதயத்திற்குள்ளாக பற்றிப் பிடித்திருக்குமேயானால், அப்பொழுது மற்ற காரியங்கள் யாவும் இரண்டாம் தரமானதாகவே ஆகிவிடுகின்றன” என்றேன். 35 நான் அங்கே ஒரு மரக்கட்டையின் மேல் அமர்ந்து, ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய வேதாகமம் திறந்தது. நான் எபிரெயரின் புத்தகம் 6-ம் அதிகாரத்தில்…வாசித்துக் கொண்டிருந்தேன். நான் அங்கே வாசித்த்துக் கொண்டிருந்தேன், அதாவது எப்படியெனில், “ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், மறுதலித்துப்போனவர்கள்…மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” என்பதாயிருந்தது. 36 அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து என்னிடத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். “அது என்ன?” நான் அதை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். அப்பொழுது ஒரு தரிசனம் உண்டானது. அப்பொழுது நான் உலகமானது எனக்கு முன்பாக நின்று சுழல்வதைக் கண்டேன். அது நடுவதற்கு ஆயத்தமாக உழப்பட்டிருந்ததைப் போன்றும், முழுமையாய் வயலில் பரம்படிக்கப்பட்டிருந்ததைப் போன்றும் இருந்தது. அப்பொழுது அங்கே வெண்மையான வஸ்திரம் தரித்த ஒரு மனிதன் புறப்பட்டுச் சென்று விதைகளை விதைத்தான். அவனுக்குப் பின்னே பூமியின் வளைவில் மற்றொரு மனிதன் கறுப்பான வஸ்திரந்தரித்து அவனுக்குப் பின்னே விதைகளை விதைத்தான். முளைத்தெழும்பின அந்த நல்ல மனிதன் விதைத்த விதைகளோ கோதுமைகளாயிருந்தன. கறுப்பு வஸ்திரம் தரித்த அந்த மோசமான மனிதன் விதைத்த விதைகளும் முளைத்தெழும்பின. அவைகள் முளைத்தெழும்பினபோதோ அவைகள் களைகளாயிருந்தன. ஓ, ஒன்று மற்றொன்றிற்கு முரண்பட்டதாயிருந்தது. 37 அப்பொழுது அந்த தரிசனத்தில் ஒரு பெரிய வறட்சி உண்டானது. அந்த சிறு கோதுமை மணிகளோ தங்களுடைய தலைகளைத் தாழ்த்தின; அவைகள் நீரை உட்கொள்ள மிகுந்த தாகமாயிருந்தன. களைகளும் தங்களுடைய தலைகளை தாழ்த்திக் கொண்டன; அவைகளும் நீரை உட்கொள்ள தாகமாயிருந்தன. அப்பொழுது ஒரு பெரிய மேகம் அவைகளின் மீது அங்கு வந்து மழையைப் பொழிந்தது. உடனே அந்த சிறு கோதுமை மணிகள் நிமிர்ந்து, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூச்சலிடத் துவங்கின. அவைகள் அந்தத் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள அவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தன. பின்னர் இந்தச் சிறு களைகளும் அவ்வாறே நிமிர்ந்து நின்று, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று அதே தண்ணீருக்காக்க் கூச்சலிடத் துவங்கின. 38 அப்பொழுது நான் புரிந்து கொண்டேன். புரிகின்றதா? அங்குதான் காரியம் உள்ளது. பரிசுத்த ஆவியானது விழும், ஆனாலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்கள் அறியப்படுகிறார்கள்” என்று கர்த்தராகிய இயேசு கூறினார். புரிகின்றதா? பார்த்தீர்களா? ஆவியின் பிரதிச்செயலின் மூலமாயல்ல, அவர்கள் வியாதியஸ்தரைச் சுகப்படுத்தினாலும் அல்லது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசினாலும் அல்லது அவர்கள் ஆவியில் பாடினாலும் அல்லது அவர்கள் இந்த விதமாய் அல்லது அந்த விதமாய் களிகூர்ந்தாலும் சரி, அவைகளினால் அல்ல, அவர்கள் அவை எல்லாவற்றையும் செய்ய முடிந்தும், அதே சமயத்தில் இழக்கப்படக்கூடும். அதுவோ உங்களுடைய ஜீவியத்தில் உங்களுக்குள்ளாக இருக்கிற ஒரு மீண்டும் பிறந்த அனுபவமாயிருக்கிறது. 39 இப்பொழுது, பவுல் அந்தக் கொரிந்தியர்களுக்கு இதைப் புரியவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். “நான்…” இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரம் வழியாய் நடந்துவந்தார்கள். …மோசேக்குள்ளாக…ஞானஸ்நானம்பண்ணப் பட்டார்கள். 40 அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்திரத்திற்குள்ளாகச் சென்றனர். இயேசு, “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை”. அது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதல்ல. உங்களால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடிந்து, அதே சமயத்தில் இழக்கப்பட்டுப்போகவுங்கூடும். நிச்சயமாகவே. 41 இது வெறுமனே சிறு பிள்ளைகளுக்கான பண்டம் அல்ல. இது…முற்றிலுமானதாயுள்ளதே…இது ஆழமானதாய் உள்ளது. கிறிஸ்தவ மார்க்கம் என்பது வெறுமனே ஒரு சிறிய, இலேசான நம்பமுடியாத காரியமாய், அதாவது, “நல்லது, நான் சபைக்குச் செல்வேன், செல்ல வேண்டியது என்னுடைய கடமை என்பதை நான் அறிவேன்” என்று கூறுவதைப் போன்றதல்ல. அதுவல்ல கிறிஸ்தவ மார்க்கம். சகோதரனே, கிறிஸ்தவ மார்க்கம்…அதுவல்ல… 42 அது தேவன் செய்திருக்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. தேவன் கிறிஸ்துவுக்குள் உங்களைத் தெரிந்துக் கொண்டு, கிறிஸ்துவுக்கு உங்களை ஓர் அன்பின் வெகுமதியாக அளித்துள்ளார். அப்படியானால்…தேவனுடைய அழைப்பு, தெரிந்துக் கொள்ளுதலாயிற்றே! அந்த மாதிரியான நபராக ஆகும் தருணம் நமக்கு உண்டாயிருக்குமேயானால், அப்பொழுது அற்பமானப் பழைய உலக காரியங்களுக்காக அதைப் புறக்கணிக்கலாமா? இப்பொழுது நாம் தொடர்ந்து வாசிக்கையில் கவனியுங்கள். எல்லோரும் ஒரே ஞானமன்னாவைப் புசித்தார்கள். 43 நீங்கள் அதை கேட்டீர்களா? 3ம் வசனம். எல்லோரும் ஒரே ஞானமன்னாவைப் புசித்தார்கள். 44 அவன் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான்? சபையின் பிரமாண சடங்கு முறைகள். ஜனங்கள் சபைக்கு வந்து, அவர்கள் மனந்திரும்பியிருக்கின்றனர் என்றும், கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கின்றனர் என்றும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தின் பேரில் எடுத்துள்ளோம் என்றும் கூறுகிறார்கள். பவுல் “அவர்களும்கூட அதை வனாந்திரத்தில் செய்தனர்” என்றான். அதைத்தான் கொரியந்தியர்களும் செய்திருந்தனர். அவர்கள் உள்ளே வந்தபோது, கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். வெளிப்புறமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பிழைப்பிற்காக அவரை ஏற்றுக் கொண்டிருந்தனர். அறிவுக்குகந்த பிரகாரமாய் அவரை ஏற்றுக்கொண்டிருந்தனர். 45 ஆனால் சகோதரனே, அது அறிவாற்றல்களைப் பார்க்கிலும் பெரிதான ஒன்றாயுள்ளது. அது அதற்கும் அப்பால் செல்கிறது. அது ஒரு—ஒரு அசலான பிறப்பினிடத்திற்குச் செல்கிறது. வெறுமனே ஒரு மனஞ்சார்ந்த கருத்தல்ல அல்லது ஒரு உணர்ச்சிவசப்பட்ட கிரியை அல்ல. ஆனால் அது ஒரு பிறப்பாய், ஒரு அனுபவமாய், இருதயத்திற்குள் ஆழமாய் செல்லுகிற ஏதோ ஒரு காரியமாய், உள்ளிரிந்திரியங்களில் மாற்றமுண்டாக்குகிறதாய், அதாவது வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் செய்திருக்கக்கூடாதக் காரியங்களை நீங்கள் செய்யும்படி செய்கிறது. அது நேசிக்க முடியாதவர்களை உங்களை நேசிக்கும்படி செய்கிறது. அது நீங்கள் செயல்படும்படி நினைத்திருந்ததைப் பார்க்கிலும் உங்களை வித்தியாசமாக செயல்படச் செய்கிறது. 46 நெருக்கடியான நிலைமைகள் எழும்பும்போது, அது உங்களுடைய நங்கூரமாயுள்ளது. அப்பொழுது நீங்கள், “நான் அதைச் செய்வேனா?” என்று வியப்படைய வேண்டியதில்லை. ஓ, இல்லை. அது நான் அதைச் செய்வேனா என்பதல்ல. அது ஏற்கனவே எனக்காகச் செய்யப்பட்டிருக்கிறது. கிறிஸ்து தாமே எனக்குள்ளாக இருந்து அதை செய்திருக்கிறார். நான் அவருடைய நங்கூரத்தில் மட்டுமே அப்படி நம்பிக்கைக் கொண்டுள்ளேன். என்ன ஓர் அற்புதமான காரியம்! 47 கவனியுங்கள், அவர்கள் எல்லாருமே இராபோஜனம் எடுத்தனர். உள்ளே…இருந்த அந்த வெளிச்சமோ…அது ஓர் இயற்கையான நடைமுறையாயிருந்தது என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் அது வானத்திலிருந்து பெய்த சிறிய பனிக்கட்டியைப் போல இருந்தது. அவைகள் தேனோடு கலந்து சிறு மென்மையான அப்பத்துண்டுகளாயிருந்தன. அது…அந்த மென்மையான அப்பத்துண்டோ எளிதில் கரையக்கூடிய ஒரு சிறு துண்டாயும், தேநீருடன் உண்ணும் இனிப்பான ஒரு சிறு அப்ப வகையுள்ளதாயும், அந்த அப்பத்தின் மீது தேனைக் கொண்டதாயுமிருந்தது. அவர்கள் எல்லோருமே அதில் பங்குபெறுகிறவர்களாயிருந்தனர். ஒவ்வொருவரும் சிவந்த சமுத்திரத்தினூடாக கடந்து, மேகத்தினூடாகவும் சமுத்திரத்தினூடாகவும் மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். மோசே தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தபடியால் அவனுடைய போதனைகளைப் பின்பற்றினர். அவர்கள் எல்லோருமே அவனுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். நாம் இன்றைக்கு கிறிஸ்தவ சபையின் மகத்தான போதனையாளரான பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகின்றது போல அவர்கள் எல்லோருமே அவனைப் பின்பற்றவர்களாயிருந்தனர். நாம் தண்ணீர் ஞானஸ்நானத்தினூடாக வழிநடத்தப்படுகிறோம். அவன், “அவர்கள் எல்லோரும் ஒரே மன்னாவைப் புசித்தனர்” என்றான். அந்த… 48 அது என்ன செய்தது? மோசேக்காகவும், காலேபுக்காகவும், யோசுவாவுக்காகவும் அந்த மன்னா விழுந்ததுப் போன்றே கோராகுக்காகவும், அவனுடைய கூட்டத்தாருக்காகவுங்கூட விழுந்தது. அவர்கள் எல்லோரும் ஒன்றாய் கலந்திருந்தனர்; எல்லாருமே ஞானஸ்நானத்தில் பங்கு கொண்டிருந்தவர்களாயிருந்தனர். எல்லாருமே அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் பங்கு கொண்டிருந்தவர்களாய், எல்லாருமே அறிக்கையிடுவதில் பங்கு கொண்டவர்களாயிருந்தனர். 49 இப்பொழுது, எல்லாருமே இராபோஜனத்தில் பங்கு கொண்டவர்களாயிருந்தனர். உங்களுக்கு அது புரிகின்றதா? அந்த பயபக்திக்குரிய எச்சரிப்பை நோக்கிப் பாருங்கள். கூடார அங்கத்தினர்களே, அதை ஆழமாக பதியும்படி புரிந்து கொள்ளுங்கள். அது உங்களுடைய நித்திய பயண இலக்கு என்பதையும், அதுவே அங்கே சரியாகத் தொங்குகிறது என்பதும் நினைவிருக்கட்டும். அதை ஒரு சிறு வெள்ளத்தைப் போன்றோ அல்லது ஏதோ ஒரு காரியத்தைப் போன்றோ வெறுமனே கடந்துசெல்ல விடவேண்டாம். இது நாம் இதற்குப்பின் ஜீவிப்போமா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்துகின்ற ஒரு காரியமாய் உள்ளது. 50 அவர்கள் எல்லாரும் சிவந்த சமுத்திரத்தினூடாக மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள் எல்லாருமே அதே ஆவியின் ரூபத்தை, மேகத்தை, அக்கினி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்தனர். அவர்கள் எல்லாருமே ஒரே தூதனால் வழிநடத்தப்பட்டனர். அவர்கள் எல்லாருமே ஒரே மேய்ப்பனால் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் எல்லாரும் சமுத்திரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அவர்கள் எல்லாருமே அந்த ஆவிக்குரிய மன்னாவைப் புசித்தனர். அந்த மன்னா கிறிஸ்துவாயிருந்தது. கிறிஸ்து இறங்கி வந்தார். அதாவது இங்கே ஜனங்கள் தங்களுடைய பயணத்தில் அழியாதபடி ஆதரித்து காப்பாற்ற மன்னா ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து வந்தது. 51 கிறிஸ்து வானத்திலிருந்து வந்து, தம்முடைய ஜீவனை, அதாவது, “அவர்மேல் விசுவாசமுள்ளவன் எவனோ அவன், கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” தந்தருளினார். கிறிஸ்து இறங்கி வந்து மாறாத அதே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் புசிக்கும்படிக்கு நம்முடைய மன்னாவானார். 52 ஆகையால், பரிசுத்த ஆவியானது ஜனங்கள் மத்தியில் சரியாக விழக்கூடும், அப்பொழுது கிறிஸ்தவனும், வெதுவெதுப்பானவனும் இருவரும் மற்றும் அரைவழி கொண்ட விசுவாசிகளும், எல்லைக்கோடு விசுவாசிகளும் எல்லாருமே ஒன்றையே புசிப்பார்கள். ஆனால் அதே சமயத்தில் இது அதனைப் பொருட்படுத்தவில்லை. ஓ, என்னிடத்தில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு இங்குள்ள ஒவ்வொரு நபருடைய இருதயத்திலும் அதை ஆழமாய் பதியச் செய்ய முடிந்தால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். இது என்ன ஓர் ஆழமான காரியமாயிருக்கிறது என்று பாருங்கள். இது அதனோடு விளையாடும்படியான ஏதோ ஒரு காரியம் அல்ல. இது வெறுமனே சபைக்கு செல்வதல்ல. 53 இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் எல்லோரும் ஒரே ஆவிக்குரிய மன்னாவைப் புசித்தனர். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஆவிக்குரிய மன்னாவாயிற்றே! 54 “ஓ,” நீங்களோ, “நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். அல்லேலூயா! நான் ஆவியில் சத்தமிட்டிருக்கிறேன். நான் இதை உணருகிறேன்” என்று கூறலாம். அதற்கு இதனோடு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நாம் நம்முடைய நித்திய பயண இலக்கை எப்படி ஒரு உணர்ச்சிவசப்படுதலின் அடிப்படையில் கொண்டிருக்க முடியும் என்பது உங்களுக்கு புரிகிறதா? நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாளில், எப்படியாய் ஜனங்கள் தங்களுடைய—தங்களுடைய பயண இலக்கை வெறுமனே ஒரு உணர்ச்சிவசப்படுதலின் பேரில் அடிப்படியாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் காணமுடிகிறதா? “ஓ”, நீங்களோ, “நான் அதைப் பெற்றுக் கொண்டேன் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் என் மூலமாக செல்லும் வல்லமையை நான்—நான் உணர்ந்தேன். நான் இதைச் செய்தேன்” என்று கூறலாம். அது முற்றிலும் சரியாகக் காணப்படலாம். ஆயினும் அப்படியிருந்தும் நீங்கள் இழக்கப்படுவீர்கள். 55 ஓ, நமக்கு இன்னும் சற்று நேரம் இருந்தால் நலமாயிருக்கும். நாம் அப்படியே ஒரு நிமிடம் இங்கே 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்திற்கு திரும்பி, சரியாக இங்கே அதைக் குறித்து பவுல் என்ன கூறவேண்டியவனாயிருக்கிறான் என்பதை கவனிப்போமாக. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், (அன்பு) சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 56 உணர்ச்சிவசப்படுதலின் பேரில் தங்களுடைய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்த உணர்ச்சிவசப்படுதலான சபைக்குள்ளாக அந்தக் கண்டிப்பான பண்டைய அப்போஸ்தலன் அதை ஆழமாய் பதியவைப்பதைக் கவனியுங்கள். இப்பொழுது இது ஞாயிறு வேதபாடப் பள்ளியாய் உள்ளது. இது ஒரு திருத்தலைக் கொண்ட ஒரு ஸ்தலமாயுள்ளது. இது போதித்தலைக் கொண்ட ஒரு ஸ்தலமாயுள்ளது. பிரசங்க பீடத்தில் நின்று தவறாக வழிநடத்தும் மனிதனுக்கு ஐயோ, சகோதரனே, இது நாம் வேத வாக்கியத்தை வேத வாக்கியத்தோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கிற நேரமாய் உள்ளது. அது உண்மை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 57 பாருங்கள், உங்களுடைய எல்லா நல்ல கிரியைகளும், உங்களுடைய எல்லா நல்ல செய்கைகளும், நீங்கள் கொண்டுள்ள எல்லா ஆவிக்குரிய காரியங்களும், நீங்கள் கொண்டுள்ள எல்லா வரங்களும், நீங்களும் கொண்டுள்ள எல்லா உணர்ச்சிவசப்படுதல்களும், நீங்கள் கொண்டுள்ள எல்லாச் சந்தோஷமும், உங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா சமாதானமும், அதனோடு துவங்கும்படி எவ்விதச் சம்பந்தமும் ஒருபோதும் கொண்டிருக்கவே இல்லை. [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 58 அப்படியே ஒரு நிமிடம் அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு அந்த சபைகளைக் குறித்து, நம்முடைய பெரிய சபைகளைக் குறித்து, பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றுமுள்ள ஸ்தாபனங்களைக் குறித்தும் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள், “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறும் காரணத்தினால் உள்ளே வந்து, தங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்துகொண்டால், அதுவே இதனைத் தீர்க்கிறது என்று அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். அவைகள் எவ்வளவோ தூரமாயிருக்கின்றனவே! 59 நம்முடைய பெந்தெகோஸ்தே ஜனங்கள், பாருங்கள், அவர்கள் ஒரு சிறு உணர்ச்சிவசப்படுதலைப் பெற்றுவிட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் நன்மையாகவே உணர்ந்த காரணத்தால், அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினர் என்ற காரணத்தால், தங்களுடைய கரத்தில் இரத்தத்ததையும், தங்களுடைய முகத்தின் மேல் கொஞ்சம் எண்ணெய் வடியும் காரணத்தால் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு காரியத்தால், “நாங்கள் அதைப் பெற்றுக் கொண்டோம்” என்றே எண்ணிக் கொள்கிறார்கள். ஓ, அதுவோ உண்மைக்கு கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ளதே! நீங்கள் அதைப் புரிந்துக் கொண்டீர்களா? பாருங்கள். எப்படியாய் பிசாசு, இப்பிரபஞ்சத்தின் தேவனாயிருக்கிறபடியால், அவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கிறான். அவர்களும் அதைப் போன்ற ஜீவியத்தின் பேரிலேயே அப்படியே தொடர்ந்து செல்கிறார்கள். கவனியுங்கள். எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 60 அந்த எல்லா வரங்களையும், அந்த எல்லா நல்ல காரியங்களையும் நோக்கிப் பாருங்கள். “நான் அன்னதானம்பண்ணுகிறேன். நான் கிட்டத்தட்ட ஒரு நல்ல இருதயத்தை எனக்குள் கொண்டவனாயிருக்கிறேன். நான் இதைச் செய்கிறேன், நான் அதைச் செய்கிறேன், நான் சபைக்குச் செல்கிறேன். நான் அந்நிய பாஷைகளில் பேசுகிறேன், நான் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன், நான் வியாதியஸ்தரை சுகமாக்குகிறேன். நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன். நான் இந்தக் காரியங்களைச் செய்கிறேன்.” பவுலோ, “அப்படியிருந்தாலும், நான் ஒன்றுமில்லை” என்றான். அந்த எல்லாக் காரியங்களுமே மாமிசப்பிரகாரமான பாவனையாகச் செய்து காட்டப்படக்கூடும். இப்பொழுது அது என்ன கூறுகிறது? அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, (சற்று சிந்தித்துப் பாருங்கள்!) சினமடையாது, தீங்கு நினையாது, 61 அன்பு, அன்பு, அன்பு என்றால் என்ன? அது தேவனாய் இருக்கிறது. எப்படித் தேவன் உங்களண்டை வருகிறார்? ஒரு பிறப்பின் மூலமே. புரிகின்றதா? 62 இப்பொழுது அவர்கள் எல்லோரும் மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள் எல்லாரும் இராபோஜனத்தில் பங்கு கொண்டு புசித்தனர். அவர்கள் எல்லோரும் தேவனிடத்திலிருந்து வந்த ஒரே ஆவிக்குரிய மன்னாவை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே காரியத்தையே புசித்தனர். 63 இன்றைக்கு நாம் சுற்றி நின்று, வார்த்தையைக் கேட்டு அதன்பேரில் களிகூர்ந்து, அந்த மன்னாவை எடுத்துப் புசித்து, “ஓ, அல்லேலூயா! அது நன்றாயுள்ளது. நான் அதைப் பாராட்டுகிறேன். ஆம், நான் சபையில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். நான்—நான் ஏற்றுக்கொண்டதை வெளிப்படையாக அறிவிப்பு செய்கிறேன். நான் என்னுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன். நான் ஓர் உரிமை ஆவண பத்திரத்தில் கையொப்பமிடுகிற ஓர் அங்கத்தினராயிருக்கிறேன்” என்று கூறுகிறோம். ஆயினும் தேவன் செய்துள்ள ஏதோ காரியம் அங்கில்லையென்றால் அவை யாவும் முற்றிலும் வீணானதாயுள்ளது. அது…அவ்வாறிருந்தால்…அவைகள் நீங்கள் செய்த காரியங்களாய் உள்ளன. அது உங்களுடைய விசுவாசம் தோற்றுவித்த காரியங்களாய் இருக்கின்றன. 64 ஆனால், தேவன் புதிய பிறப்பிற்கு, உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தை செய்திருந்தாலொழிய! இப்பொழுது அப்படியே ஒரு நிமிடம். இப்பொழுது 4-வது வசனம். எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில் அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 65 அவர்கள் எல்லாரும் அந்த ஊற்றிலிருந்தேக் குடித்தனர். அவர்கள் களிகூர்ந்தனர். அது எதை பொருட்படுத்துகிறது? கோதுமையும், களையும் அந்த ஆவிக்குரிய தண்ணீரைப்பெற இரண்டுமே களிகூர்ந்தன. நாங்கள் சபைக்குச் செல்கிறோம், நாங்கள் மற்றவர்களோடு சேர்ந்து எங்களுடைய கரங்களைத் தட்டுகிறோம். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒன்று சேர்த்து மூன்று முறைகள் தட்டுகிறார்.—ஆசி.] நாங்கள் மற்றவர்களோடு சேர்ந்து ஆரவாரமிடுகிறோம். நாங்கள் மற்றவர்களோடு சேர்ந்து தரையில் மேல் கீழும் குதிக்கிறோம். நாங்கள் மற்றவர்களோடு சேர்ந்து தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். நாங்கள் மற்றவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைக்கிறோம். நாங்கள் மற்றவர்களைப் போல அந்நிய பாஷைகளில் பேசுகிறோம். நாங்கள் மற்றவர்களைப் போல வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறோம். ஆனால் அவன் கூறினான்…இப்பொழுது நாம் சற்று இன்னும் கூடுதலாக மேற்கொண்டு பார்க்கும்படி செல்கையில் கவனியுங்கள். 66 இப்பொழுது…ஓ, “அந்தக் கன்மலை கிறிஸ்துவாயிருந்தது” என்பதின் பேரில் ஒரு நிமிடம் நிறுத்த விரும்புகிறேன். அந்தக் கன்மலை கிறிஸ்துவாயிருந்தது. இன்றைக்கு அது ஆவிக்குரிய ரூபத்தில் உள்ளது போன்றே, அது அங்கே வெளிப்படையான பொருள் சார்ந்த ரூபத்தில் இருந்தது. மன்னா, போஜனம்; பரலோகத்தின் தேவனிடத்திலிருந்து வருகிற வார்த்தையாயிருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். நாம் வார்த்தையைப் புசிக்கிறோம். புரிகின்றதா? நாம் இந்தக் காலையில் இந்தச் செய்தியில் அமர்ந்துள்ளது போன்றே அமர்ந்து நாம் செவிகொடுக்கிறோம். நம்முடய ஆத்துமாக்களோ அந்த வார்த்தையை பற்றிக் கொள்கின்றன. நாம் வார்த்தையினால் ஜீவிக்கிறோம். அவன், “அவர்கள் எல்லாரும் ஒரே ஞான மன்னாவைப் புசித்தனர். அவர்கள் எல்லாரும் குடித்தனர். எல்லாருமே ஒரே ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தனர். அந்தக் கன்மலை கிறிஸ்துவே” என்றான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 67 இப்பொழுது அவன் என்ன செய்யப் போகிறான்? அதை இங்கே ஒரு முடிவிற்கு கொண்டு வந்து நிறுத்துகிறான். அவன், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். நான் உங்கள் மத்தியில் வரும்போது, ஒருவன் ஒரு சங்கீதத்தை உடையவனாயிருக்கிறான். ஒருவன் ஒரு அந்நிய பாஷையை உடையவனாயிருக்கிறான். ஒருவன் இந்த ஒன்றை உடையவனாயிருக்கிறான், ஒருவன் அந்த ஒன்றை உடையவனாயிருக்கிறான். ஒருவன் ஒரு தீர்க்கதரிசனத்தை உடையவனாயிருக்கிறான். ஒருவன் ஒரு வெளிப்பாட்டை உடையவனாயிருக்கிறான், ஒருவன் இதைச் செய்து கொண்டிருக்கிறான், ஒருவன் அதைச் செய்து கொண்டிருக்கிறான்” என்று அந்தக் கொரிந்தியர்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறான். ஜாக்கிரதையாயிருங்கள். அதன்பேரில் உங்களுடைய விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காதீர்கள். அந்தக் காரியங்கள் யாவும் சரியாயிருக்கின்றன. அவைகள் சபையில் தங்களுடைய ஸ்தானங்களை பெற்றுள்ளன. ஆனால் அதன்பேரில் ஒருபோதும் உங்களுடைய இரட்சிப்பை அடிப்படையாகக் கொள்ள வேண்டாம். உங்களுடைய ஜீவியமானது தேவனுடைய வார்த்தைக்கு ஒத்திசைந்துப் போகவில்லையென்றால், அப்பொழுது இது தேவனோடு சரிப்படுத்திக் கொள்வதற்கான நேரமாய் உள்ளது. 68 இப்பொழுது கவனியுங்கள். இந்தக் கன்மலை, இந்தக் கன்மலை வனாந்திரத்தில் இருந்த கன்மலையாயிருந்தது. 69 நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவன் மோசேயை அழைத்தபோது, பார்வோனின் நுகத்தின் கீழிருந்த இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க எகிப்திற்கு அவனை அனுப்பினார். அப்பொழுது அவர், “உன் கையில் இருக்கிறது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவனோ, “அது ஒரு கோல்” என்றான். 70 அவன் அந்தக் கோலை எடுத்து, அதைத் தரையில் போட்டபோது, அது ஒரு சர்ப்பமாயிற்று. அப்பொழுது அவன், மோசே அதற்கு விலகியோடினான். அதன் பின்னர் அவன் அதை மீண்டும் மேலே எடுத்தபோது அது அவனுடையக் கையில் கோலாயிற்று. 71 அந்தக் கோல், அவன் எகிப்திற்குள் சென்றபோது, அவன் அதை எகிப்தின் மீது நீட்டினான், அப்பொழுது வண்டுகள் உண்டானது. அவன் அதை நீட்டினான், அப்பொழுது வாதைகள் விழுந்தன. அது தேவனுடைய நியாயத்தீர்ப்பாய் இருந்தது. தேவனுடைய நியாயத்தீர்ப்பு நீட்டுகின்ற கோலில் இருந்தது. 72 அதன் பின்னர், கவனியுங்கள், அந்தக் கோல் உண்மையாகவே கையாளப்படுவதற்கு முன்னர், மோசே தன்னுடையக் கரத்தை தன்னுடைய மடியில் போட்டான். அப்பொழுது அது குஷ்டரோகம் பிடித்திருந்ததாகவே மாறினது. 73 அது ஒவ்வொரு மனிதனும் துவக்கத்தில் சுபாவத்தின் மூலம் ஒரு பாவியாயிருப்பது போன்றேயுள்ளது. அதற்கு வேறு வழியே கிடையாது. நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவர்களாய் உலகத்திற்கு வந்தீர்கள். நீங்கள் உங்களுடைய தாயாருடைய சபையின் பீடத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம். நீங்கள் தெளிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் இதுவாக, அதுவாக இருந்திருக்கலாம், ஆனாலும் நீங்கள் துவக்கத்திலேயே ஒரு பாவியாயிருக்கிறீர்கள். 74 அதன் பின்னர் மற்றொரு காரியம் உண்டு. தேவன், “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய மடியிலே போடு” என்றார். அவன் மீண்டும் தன்னுடையக் கரத்தைத் தேவனுடைய கட்டளையின்படி அவனுடைய மார்பின்மேல் போட்டான், அங்கிருந்துதான் நாம் கொண்டுவரப்பட்டோம். முதலில் அவனுடையக் கரம் குஷ்டரோகமாயிருந்தது. நீங்கள் முதலில் தேவனால் ஒரு பாவியாகக் கொண்டுவரப்பட்டீர்கள். விருப்பத்தின் மூலமாயல்ல, ஆனால் சுபாவத்தின் மூலமே. அதன் பின்னர் நீங்கள் மீண்டும் திரும்பிச் செல்கிறீர்கள். அவன் வெளியே எடுத்தபோது, அந்தக் கரம் சுத்தமாயும், பரிபூரணமாயுமிருந்தது. நியாயத்தீர்ப்பின் கோலை அசைத்து ஆட்டிக்காட்டும் முன்னர் அது ஒரு சுத்தமான கரமாயிருக்க வேண்டியதாயிருந்தது என்பதையே இந்தக் கரம் காண்பிக்கிறது. எந்த ஊழியக்காரனும், எந்த போதகனும்… 75 நான் இந்தக் காலையில் இங்கு வருவதற்கு சற்று முன்னர், என்னுடைய வானொலியைக் கேட்கும்படி திருப்பின போது, உண்மையாகவே என்னுடைய இரத்தத்தை உறையச் செய்யும் ஒரு காரியத்தைக் கேட்டேன். எந்தவிதமான அலட்சியப்படுத்துதலுமில்லை; அந்த நபருக்கு உறவினர் எவரேனும் இங்கிருந்தால் உங்களைப் புண்படுத்த வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால் இதுவோ…சமயமாயுள்ளதே…நேர்மையாயிருக்கும்படி உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லை என்றும் கூறி எப்பொழுதும் குறைவற்ற கிறிஸ்தவனாயிருக்கும்படி தேவனே எனக்கு உதவி செய்யும். 76 யாரோ ஒருவர், “எனக்கு என்னுடைய உடன்படிக்கை உண்டு” என்று ஒரு வேதப் பகுதியை வாசித்து, அதாவது, “பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் இருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்ற முதலாம் சங்கீதத்திலிருந்து பிரசங்கித்தார். அது யாரென்று உங்களுக்குத் தெரியுமா? சுழன்று—உருண்டு நடனமாடும் அந்த நபரான அந்த ஜிம்மி ஆஸ்பார்ன் வானொலியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். 77 ஓ, சகோதரனே, எப்போதாவது அவமானம் என்ற ஒன்று இருந்திருக்குமானால் அது இதுவேயாகும்! அதைப் போன்ற ஒரு நபருக்கு ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்குள்ளாகச் செல்ல வேண்டிய வேலையே கிடையாதே. நீங்கள் இந்த நபரை பள்ளத்தாக்குகளில் வாழ்ந்தப் பழங்காலத்தவரைப் போன்ற அரை குறை ஆடையோடு நடனம் புரிய கொண்டு சென்று, முழு இரவும் பண்டைய மாதிரியான நடனம் ஆடிவிட்டு, அந்த பண்டைய மாதிரியான நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் மற்றவர் தங்களுடைய கரங்களை தட்டி ஆர்ப்பரிக்கச் செய்கின்றீர்கள். அடுத்தநாள் காலையிலோ அவன் தன்னுடைய குரலை மாற்றிக் கொண்டு, ஒரு கிறிஸ்தவனைப் போல பேசுகிறான். ஏன், அது தேவனுடைய பார்வையில் இழிவானதாயும், அசுத்தமானதாயும் இருக்கிறது. 78 இந்த நியாயத்தீர்ப்பின் கோலை அசைவாட்டும் கரமானது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலும், வல்லமையினாலும் சுத்திகரிக்கப்பட வேண்டும். அப்படியில்லாதவனுக்கு தேவனுடைய வார்த்தையை கையாள எந்தவிதமான உறவும் கிடையாது. ஏராளமான பிரசங்கிமார்களும்கூட இந்த எல்விஸ் பிரஸ்லியை நீதிமானாக்க முயற்சிக்கின்றனர். அவன் இந்த உலகத்தில் ஒரு நவநாகரீக யூதாஸ்காரியோத்தேயல்லாமல் வேறொன்றுமில்லை. யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டான். எல்விஸ் பிரஸ்லியோ இலட்சக்கணக்கான டாலர்களையும், எளிதில் விரைவாக செல்லக்கூடிய காடில்லாக் கார்களையும் பெற்றுக் கொண்டான். ஆனால் அவன் விற்றுப்போட்டான். அவன் ஒரு பெந்தெகோஸ்தே விசுவாசியாயிருந்து தன்னுடைய பிறப்புரிமைகளை சுழன்று—உருண்டு ஆடும் நடன இசைக்காக பிசாசினால் ஏவப்பட்டு விற்றுப்போட்டு விட்டான். நான் அதன்பேரிலான வெளிப்படையான உண்மைகளைக் கூறப் பயப்படுவதில்லை. இல்லை ஐயா, ஒரு நவநாகரீக யூதாஸ்காரியோத்து. 79 ஆகையால் ஊழியக்காரர்களும்கூட அந்தவிதமான ஒரு காரியத்தை ஆதரித்து வளர்த்து உருவாக்க முயற்சிக்கிறார்கள். எல்விஸ் பிரஸ்லியோ, ஆம், “என்னுடைய எல்லா வெற்றிக்காகவும் நான் தேவனையே நம்புகிறேன்” என்கிறான். எப்படி ஒரு ஜீவனுள்ள, பரிசுத்தமான தேவன் இழிவாய், ஒரு பிசாசாய், பேய்த்தனமாக்கப்பட்டுள்ள ஒரு காரியத்திற்கு வெற்றியை அளிப்பார்? 80 இலட்சக்கணக்கான ஆத்துமாக்களை தன்னுடைய பழைய மட்டரகமான, அசுத்தமான சுழன்று—உருண்டு ஆடும் நடன இசைக் காரியத்தினால் நரகத்திற்கு அனுப்பியிருக்கிற எல்விஸ் பிரஸ்லியைப்போன்ற ஒரு நபரே இந்த தேசம் எப்போதும் கண்டிருக்கிற முற்றிலுமான மிகப்பெரிய இடர்களில் ஒன்றாய் இருந்து வருகிறது. நிச்சயமாகவே. அதற்கு என்னிடத்தில் எந்த மன்னிப்பும் கிடையவே கிடையாது. உங்களால் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்க முடியுமானால், அப்பொழுது அது மாம்ச உருவில் குடிகொண்டுள்ள ஒரு பிசாசாய் உள்ளது என்பது நினைவிலிருக்கட்டும். முற்றிலுமாக. 81 ஜிம்மி ஆஸ்பார்ன் மற்றும் அதைப் போன்றவர்களுக்கு தேவனுடைய வார்த்தையோடு எவ்வித தொடர்பும் கிடையாது. எந்த மனிதனுமே தேவனுடைய நாமத்தை வீணாக எடுத்துக் கொண்டு, களியாட்டங்களிலும், சுழன்று—உருண்டு ஆடும் நடன இசைகளிலும், அதைப்போன்று இழிவான காரியங்களிலும் பங்கு கொண்டு, பின்னர் எந்த ஒரு பிரசங்க பீடத்திற்கும் வந்து, தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கூற ஒருபோதும் முயற்சிக்கவே கூடாது. 82 இன்றைக்கு அனேக சபைகளில் உள்ள காரியம் அதுவேயாகும். நீங்கள் இங்குள்ள இந்த ஸ்தலங்களிலிருந்து பண்டைய பூகி—வூகி என்ற இசையை பயின்று பாடுபவர்களில் சிலரையே உடையவர்களாயிருக்கிறீர்கள். ஓர் இரவு வெளியே நடனக்களிப்பிலும், இங்குள்ள இந்த எல்லா ஆடிப்பாடி உருளும் நடனங்களை ஆடும் ஒரு பெண், அவள் பீடத்தண்டை வர, அடுத்தநாள் நீங்களோ அவளை ஒரு விசேஷித்த பாடலைப் பாட அனுமதிக்கிறீர்கள். உங்களில் சிலர் ஒரு இரவு நேர களியாட்ட விருந்து சங்கத்தில், அந்த இடங்களில் யாழ் வகையான ஆறு நரம்புகளைக் கொண்ட சிறு வீணையை வாசிப்பவர்களைக் கொண்டு வந்து, இரண்டே வாரங்களில் பிரசங்க பீடத்தில் அவர்களை பிரசங்கிக்க வைக்கிறீர்கள். 83 சகோதரனே, அவன் இங்கே ஒருபோதும் அதை செய்யவே கூடாது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். உண்மையாகவே செய்யக்கூடாது. அவன் தன்னை ஒரு தேவனுடைய மனிதனாக நிரூபிக்கும்படி ஆய்ந்து படித்து கண்டறியப்பட வேண்டும். இங்கே ஓர் இரவில் இந்த விதமாக குதிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்வதில்லை. இன்றைக்குச் சபையானது பெற்றுள்ள நிலைமையே அதுவாகத்தான் உள்ளது. 84 நமக்கு தேவை சத்தியமே. இந்த வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. அது உண்மை. இந்த நியாயத்தீர்ப்புக்கோலை அசைவாட்டுகிற கரமானது ஒரு சுத்தமான கரமாய் இருக்க வேண்டும். முற்றிலுமாக. 85 மோசேயினுடைய அந்த நியாயத்தீர்ப்பின் கரமானது சுத்திகரிக்கப்பட்டு, அதன் பின்னரே அந்தக் கோலானது அதில் வைக்கப்பட்டது. அப்பொழுது அந்தக் கோல் சென்று, இஸ்ரவேலரின் மேல் நியாயத்தீர்ப்புகளைக் கொண்டு வந்தது. 86 அதன்பின்னர், வனாந்திரத்தில், அது அழகான மாதிரியாயுள்ளது. நான் முடித்துவிட வேண்டும். இந்த அழகான மாதிரி, அந்த கன்மலை அங்கிருந்தபோதோ “அந்தக் கன்மலை கிறிஸ்துவாயிருந்தது.” 87 அழிந்து போகும் ஜனங்களோ தண்ணீருக்காக மரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அதற்கு பாத்திரவான்களாக இருந்தனர். அவர்கள் முறுமுறுத்திருந்த காரணத்தால் மரிக்கப் பாத்திரவான்களாயிருந்தனர். அவர்கள் முறையிட்டிருந்தனர். அவர்கள் துவக்கத்திலேயே விசுவாசிகளாயில்லாதிருந்தனர். அவர்கள் ஒன்றுமற்ற அறிவாற்றலைக் கொண்ட விசுவாசிகளாயிருந்தனர். அவர்கள்…இயற்கைக்கு மேம்பட்ட காரியம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பல ஜாதியான ஜனங்களும்கூட சென்றிருந்தனர். அவர்கள் தங்களுடைய இருதயங்களில் மனமாற்றமடையாமலிருந்தனர். 88 அந்தக் கூட்டத்தில் மூன்று பேர்கள் மாத்திரமே இருந்தனர். அதாவது நாம் அறிந்துள்ளவரை; மோசே, ஆரோன்; காலேப், மீரியாம்: 89 மோசே இந்த கறுப்புநிறப் பெண்ணை மணந்திருந்த காரணத்தால், மிரீயாம் நகைத்தபோது, அவளும்கூட தன்னுடைய நம்பிக்கைத் துரோகத்தைக் காண்பித்துவிட்டாள். அப்பொழுது அவள், “மணம் புரிந்து கொள்வதற்கு மற்றப் பெண்களே அங்கு இருக்கவில்லையா? அவன் இதைச் செய்து முடித்துவிட்டானே” என்றாள். அவ்வாறு கூறினதினால் தேவன் பிரியங்கொண்டிராமல், அவளை குஷ்டரோகத்தினால் அடித்தார். 90 அப்பொழுது அவளுடைய சொந்த சகோதரனும்கூட சத்தமிட்டுக் கதறி, “உம்முடைய சகோதரியை அந்த நிலைமையில் மரிக்கவிடுவீரோ?” என்று கேட்டான். 91 அப்பொழுது தேவன் மோசேயினிடத்தில் தனக்கு முன்பாக வரும்படிக் கூறினார். அப்பொழுது அவன் போய், மிரியாமிற்காக பரிந்து பேசினான். அதற்குப் பின்னர் அவளோ நீண்ட காலம் ஜீவிக்கவில்லை. 92 இல்லை, சகோதரனே, தேவன் செய்கிறது பரிபூரணமாய் இருக்கிறது. எனவே நமக்கு நம்முடைய சிந்தனைகளைக் கொண்டு அதினோடு எந்தக் காரியத்தையும் சேர்க்க எந்தவித வேலையுமே கிடையாது. அது இருக்கிறவிதமாக அப்படியே அதை விட்டுவிடுங்கள். தேவன் அதைச் செய்தார்; தேவன் அதைக் கூறினார்; அது இதனைத் தீர்க்கிறது. அப்படியே அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அது எப்படி…என்று எனக்குத் தெரியாது. என்னால் அதை விவரித்துக் கூறமுடிந்தால், அப்பொழுது நான் தேவனோடு சமமாய் இருப்பேன். என்னால் அதை விவரித்துக்கூற முடியாது. எனவே நான் அதை அப்படியே விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான். அவ்வளவுதான் நான் செய்யும்படிக்கு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறேன். எவருமே அதை விளக்கிக் கூறும்படிக்கு கேட்டுக் கொள்ளப்படவில்லை. ஏனென்றால் அது நம்முடைய அறிவுணர்விற்கு அப்பாற்பட்டதாயுள்ளது. அது நம்முடைய அறிவுத்திறனுக்கு அப்பாற்பட்டதாயுள்ளது. அது தேவன் அதைச் செய்கிறதாயிருக்கிறது. அதினால் அது விவரிக்கப்பட முடியாது. நான் அதை விசுவாசத்தினால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நானோ, “அது என்னுடையத் தனிப்பட்ட சொத்து, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறேன். எனவே என்னால் அதை விவரித்துக் கூறமுடியாது. 93 இந்தக் கன்மலை எப்படியாய் அங்கே கிடந்தது? தேவன் ஒரு கன்மலையை உடையவராயிருந்தார். அது முழுவதும் தண்ணீரை சேமித்து வைத்ததாயிருந்தது. அது வெறுமனே ஒரு சிறு கன்மலையாய், ஒருவேளை அந்த மேஜையைவிடப் பெரியதாயிராமல் இருந்திருக்கலாம். ஆனால் மோசே இந்தக் கன்மலையை அடித்தபோது, அதிலிருந்த போதுமான தண்ணீர் புறப்பட்டு வந்து இருபது லட்சம் பேர்களுக்குத் தண்ணீரை அளித்தது. அது மாத்திரமல்ல, அவர்களோடிருந்த அத்தனைக் கால்நடைகளுக்கும், ஆடுகளுக்கும், மற்றவற்றிற்கும் தண்ணீரை அளித்தது. 94 ஓ, இந்த ஓவியர்கள் வரைந்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை நான் காணும்போது அதில் ஒரு சிறு—சிறு துளித் தண்ணீர் ஒரு கன்மலையிலிருந்து விழுவதைப்போலவும், ஒரு சிறு குழந்தை அங்கே ஒரு சிறு வாளியைத் தன்னுடைய கரத்தில் பிடித்துக்கொண்டு நிற்பதைப் போலவும் உள்ளனவே! ஓ, அது ஒருபோதும் அந்த விதமாக வரவேயில்லை. 95 அது ஏராளமாய் பொங்கிப் பீறிட்டு கொப்பளித்து வருவதைப் போல் வந்தது. அது இருபது லட்சம் பேர்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடைய ஒட்டகங்கள் மற்றும் அவர்களுடைய எல்லா மிருக ஜீவன்களுக்கும் சேர்த்தே தண்ணீர் பாய்ச்சியது. “அந்தக் கன்மலை கிறிஸ்து இயேசுவாயிருந்தது”. அது யோவான் 3:16-க்கு ஓர் அழகான இணையாயுள்ளது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” 96 என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். அவர்கள் அந்தக் கன்மலையிலிருந்து தண்ணீரைப் பெற முடிந்த ஒரே வழி எதுவென்றால், அந்த நியாயத் தீர்ப்பின் கோலானது கன்மலையை அடிக்க வேண்டியதாயிருந்தது. மோசே அந்தக் கன்மலையை அடித்தான். தேவனுடைய நியாயத்தீர்ப்பு அந்தக் கன்மலையின் மேல் தாக்கியது. அது அடித்தபோது, அது அதினுடைய தண்ணீரை அளித்தது. 97 ஜனங்கள் முற்றிலுமாக…தேவன் அவர்கள் மரிக்க அனுமதிக்கும்படி நீதியுள்ளவராயிருந்தார், ஏனென்றால் அவர்கள் அவரை அவிசுவாசித்திருந்தனர். அவர்கள் கீழ்த்தரமானவர்களாயிருந்தனர். அவர்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தனர். அவர்கள் ஜீவிக்க அபாத்திரராயிருந்தனர். மோசேயும்கூட…அவர்களை, “கலகக்காரர்” என்று அழைத்தான். தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணினார்கள். அவர்கள் மரிக்க பாத்திரவான்களாயிருந்தனர். 98 நாம் எல்லோருமே மரணத்திற்கு பாத்திரவான்களாயிருந்தோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு விரோதமான கலகக்காரர்களாயிருக்கிறோம். தெரிந்து கொள்ளப்பட்ட…கவனியுங்கள், நாம் எல்லோருமே மரிக்க பாத்திரவான்களாயிருக்கிறோம். ஆனால் தேவனோ, மிகுந்த இரக்கமுள்ளவராயிற்றே! அவர் நம்மைக் குறித்து நினைக்க வேண்டியதேயில்லை. ஆனால் அவர் நம் ஒவ்வொருவருடைய பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, தம்முடைய சொந்த நேசகுமாரனாகிய கிறிஸ்துவின் மேல் அடித்தார்; அதாவது நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனையடையும்படிக்கு அவர் அவ்வளவு இரக்கமுள்ளவராயிருக்கிறார். எனவே நம்மால் அந்தக் கன்மலையிலிருந்து பானம் பண்ண முடிந்தும், அதன் பின்னரும் நம்முடைய இருதயத்தில் எப்படி சரியில்லாமல் இருக்க முடிகிறது? 99 ஆனால், சகோதரனே, அவர்களில் இலட்சக்கணக்கானோர் இக்காலையில் அதைச் செய்கின்றனர். அது முற்றிலும் உண்மை. அவர்கள் பாப்டிஸ்டுகளாய் இருக்கிறார்கள் அல்லது மெதோடிஸ்டுகளாய் இருக்கிறார்கள் அல்லது பெந்தெகோஸ்தேக்களாயிருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு சிறு வினோதமான உணர்வைக் கொண்டிருந்த காரணத்தால், அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசின காரணத்தால், அவர்கள் சத்தமிட்ட காரணத்தால், அவர்கள் நடனமாடின காரணத்தால், அவர்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை உடையவர்களாயிருந்த காரணத்தால், தேவன் வியாதியஸ்தரை சுகமாக்கின காரணத்தால் அல்லது ஏதோ ஒரு காரியத்தின் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பதினால், அவர்கள் (அது உண்மையாயிருந்தது) என்ற ஒரு வெளிப்பாட்டை உடையவர்களாயிருந்த காரணத்தால், அவர்கள் இதை செய்த காரணத்தால் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்தக் காரியங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. அவைகளுக்கு விரோதமாக ஒன்றையும் கூறவில்லை. ஆனாலும் உங்களுடைய இரட்சிப்போடு அதற்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. எந்த ஒரு காரியமும் கிடையாது. நீங்கள் ஒரு காலன் நிறையும் அளவிற்கு உங்களுடைய கரத்திலிருந்து எண்ணெயை ஊற்றிக் காட்ட முடிந்தாலும் அல்லது உங்களுடைய முகத்திலிருந்து இரத்தத்தை வழியும்படி செய்ய முடிந்தாலும், அப்பொழுதும் அது எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்தாது. அது உண்மை. 100 பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அப்படியிருந்தாலும் அதே சமயத்தில் நான் இழக்கப்படுவேன்” என்றான். நான் ஞானமும், அறிவும் உடையவனாயிருந்து, நின்றுகொண்டு அந்த வேதாகமத்தையே விவரிக்க முடிந்தாலும், அதை வெறுமனே சற்று உற்றுப்பார்த்து…[சகோதரன் பிரான்ஹாம் துரிதமாக தன்னுடைய விரலை பலமுறை சுடக்கிடுகிறார்.—ஆசி.]…அதை ஒன்று சேர்த்து இணைக்க முடிந்தாலும், நான் ஒன்றுமில்லை என்று கூறுகிறான். அதாவது அதற்கு இதனோடு எந்தவித சம்பந்தமும் அப்பொழுதும் கிடையாதே. 101 சகோதரனே, அவர்கள் எல்லாருமே அந்த ஒரே கன்மலையிலிருந்தே பானம் பண்ணினர். “அந்தக் கன்மலை கிறிஸ்துவாயிருந்தது.” 102 நீங்கள் வந்து பானம்பண்ணும்படியான சிலாக்கியம் அடையும்படியாகவே கிறிஸ்துவின் மேல் நியாயத்தீர்ப்புகள் வந்தன. அது நீங்கள் வந்து பானம் பண்ணுவதற்கு உங்களுக்கு தேவனுடைய நன்மையாயிருக்கிறது. அது நீங்கள் வார்த்தையிலிருந்து புசிக்கும்படியாக உங்களுக்கு தேவனுடைய நன்மையாயிருக்கிறது. அது அவர் உங்களை ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு அனுமதித்தார் என்ற தேவனுடைய நன்மையாய் உங்களுக்கு உள்ளது. உங்களை ஒரு பிரஜையாக்கும்படிக்கு, உங்களுக்கு சுகத்தை அளிக்கும்படிக்கு, இந்தக் காலையில் சபையில் உங்களை அமர்த்தும்படிக்கு அது உங்களுக்கு தேவனுடைய நன்மையாய் உள்ளது. அது தேவனுடைய நன்மையாயுள்ளது. அது முழுவதுமே தேவனுடைய நன்மையாயுள்ளது. 103 ஆனால் தேவனிடத்திற்கு திரும்புகிற உங்களுடைய நன்மையைக் குறித்து என்ன? நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும், ஒவ்வொரு சிந்தனையையும், ஒவ்வொரு செய்கையையும், அவருக்கு ஒவ்வொரு காரியத்தையும் சமர்ப்பிக்க விருப்பங்கொண்டிருக்கிறீர்களா? அதைத்தான்—அதைத்தான் தேவன் உங்களுக்காக செய்துள்ளார். அவருக்காக நீங்கள் என்ன செய்வீர்கள்? 104 கவனியுங்கள், நாம் அப்படியே இன்னும் ஒரு சில வசனங்களை வாசிப்போமாக. போதகர் தன்னுடைய வார்த்தையை எடுத்துக்கூறும்படியாக நான்—நான் முடிக்கவுள்ளேன். இப்பொழுது பாருங்கள், “அதே கன்மலை கிறிஸ்துவாயிருந்தது.” இப்பொழுது 5வது வசனம். அப்படியிருந்தும், அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; 105 புரிகின்றதா? அவர்களை ஞானஸ்நானம் பண்ணும்படிக்கு அவர் அனுமதித்தார். அவர்கள் வார்த்தையைப் புசிக்கவும், அதை விசுவாசிக்கவும் அவர் அனுமதித்தார். அவர்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படிக்கும் அவர் அனுமதித்தார். அவர்கள் ஆவிக்குரிய கன்மலையிலிருந்துப் பானம் பண்ணும்படிக்கு அவர் அனுமதித்தார். எல்லாவற்றையுமே தேவன் தம்முடைய கிருபையினால் செய்தார். ஆனால் அதே சமயத்தில் தேவன் அவர்களிடத்தில் பிரியமாயிருக்கவில்லையே. பாருங்கள். …ஆதலால் அவர்கள் வனாந்திரத்தில் அழிக்கப்பட்டார்கள். 106 இந்த எல்லா அனுபவங்களுக்குப் பிறகும், நாம் கண்டிருக்கிற நம்முடைய மகத்தான எல்லாச் சுகமளிக்கும் ஆராதனைகளுக்குப் பிறகும், நாம் நிகழ்ந்ததாகக் கண்டிருக்கிற எல்லா மகத்தான அற்புதங்களுக்குப் பிறகும், நாம் கொண்டிருக்கிற மகத்தான எல்லா உணர்வுகளுக்குப் பிறகு, சத்தமிடுதல் மற்றும் தேவனைத் துதித்தலுக்குப் பிறகும், அந்தக் கன்மலையிலிருந்து பானம்பண்ணின பிறகும், நாம் கேட்டு களிகூர்ந்திருக்கிற எல்லா நல்ல பிரசங்கங்களுக்குப் பின்னரும், அப்படியெல்லாமிருந்தும் அதே சமயத்தில் அழிக்கப்படுப் போவோம். முழுமையாகவே! [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒரு முறை தட்டுகிறார்—ஆசி.] “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியேன்”. 107 சோதித்தராய்ந்து அறிந்து கொள்ளுங்களே! நமக்கு ஓர் எழுப்புதல் வந்து கொண்டிருக்கிறது. இது கடினமானதாயுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால், சகோதரனே, தன்னுடைய பிள்ளைகளைத் திருத்தாத ஏந்த ஒரு தகப்பனும் ஒரு நல்ல தகப்பன் அல்ல. அது உண்மை. “அழிந்து போவார்கள்.” இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது… 108 பவுல் பேசுகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்—ஆசி.] அது ஒரு மாதிரியாயிருந்தது. சரி. அவர்கள் இச்சித்ததுபோல, நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு,… 109 குதிரைப்பந்தயங்களில் குதிரை ஏறிச்செல்லும் பணியாளராய், கால் பந்தாட்டத்தில் சாதனை படைத்தவராய், மட்டரகமாக சுழன்று—உருண்டு நடனமாடும் இசையை வாசிப்பவராய் ஒரு மனிதன் இருந்து கொண்டிருக்க, “ஏதோ காரியம் சம்பவித்தது. நான் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டேன்” என்று கூறிவிட்டு, பின்னர் மீண்டும் அந்த எல்லா விதமான மட்டரகமான எல்விஸ் பிரஸ்லி மற்றுமுள்ள நபர்களின் பாடல்களுக்கான இசையை இசைத்துவிட்டு, பின்னர் மீண்டும் திரும்பி வந்து போலியாக பாவனை செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா? அதைக்குறித்து சிந்தித்துப் பாருங்களே! [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் பத்து முறைகள் தட்டினர். ஆசி.] 110 ஒரு மனிதனும், ஸ்திரீயும் அங்கு வெளியே அமர்ந்து கொண்டிருக்க, ஸ்திரீயானவள் அங்கு வெளியே பின் முற்றத்தில் அவலட்சணமாக காட்சியளித்துக் கொண்டு, புருஷர்களுக்கு முன்பாக தன்னை காண்பித்துக்கொண்டு, பின்னர் திரும்பி வந்து இந்த ஆவிக்குரிய கன்மலையில் இருந்து பானம் பண்ணி, சத்தமிட்டு, அதன் பின்னரும் அவ்வாறே தொடர்ந்து செயல்படுவதை உங்களால் யூகித்துப் பார்க்க முடிகின்றதா? 111 பெந்தெகோஸ்தே ஜனங்களுக்கு மத்தியில் பெண்களின் சுதந்திரத்தைக் குறித்த ஒரு பெரிய உபதேசமே உண்டு. அவர்கள் பெரிய நீண்ட காதணிகளை அணிந்து கொண்டும், மற்றும் எல்லாவிதமான ஆடைகளையுமே அணிந்து கொண்டிருக்கிறார்கள். 112 ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாலிப நபர் என்னுடைய வீட்டின் முன் ஒரு சிறு சாமான் வண்டியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவனுடைய மனைவியோ…பெந்தேகோஸ்தே சபையில்…அந்நிய பாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைக்கிறாள். நிச்சயமாகவே. அவன், “முழு சபையுமே அரைக்கால் சட்டைகளை அணிந்து கொள்கிறார்கள்” என்று கூறுகிறான். மேலும் அவன்,…“அவள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு வெளியே சென்று, மற்றவர்கள் புகை பிடித்துவிட்டு எறிந்த சிகரெட்டுத் துண்டுகளை பொறுக்கியெடுத்து புகை பிடிக்கிறாள். ஆனால் அதே சமயத்தில் சத்தமிட்டு கர்த்தரைத் துதித்து, தீர்க்கதரிசனம் உரைக்கிறாள்” என்றான். 113 நான் அன்றொரு நாள் ஒரு சபையில் நின்றிருந்தேன். அங்கே ஒரு மகத்தான தேவனுடைய மனிதன் இருக்கிறார். நான் அவர் மீது மகத்தான மரியாதையை உடையவனாயிருக்கிறேன். அப்பொழுது அங்குள்ள அந்த மனிதர்களில் ஒருவன், அதனுடைய தலைவர் வெளியே சென்ற பிறகு, அவர் இதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் அவர்களுடைய கரங்களில் இரத்தம் வழிந்தோடுதல் மற்றுமுள்ள காரியங்களைக் கூறிக்கொண்டிருந்தார். நான் வேத ஆதாரங்களின் அடிப்படையில் அந்தக் காரியத்தைக் கண்டனம்பண்ண கிழக்கிலிருந்து மேற்கு வரை முயற்சித்து என்னுடைய தொண்டையே கட்டிப் போயுள்ளது. அது தேவனால் உண்டானதல்ல. 114 கிறிஸ்துவினிடத்திலிருந்து ஏதாவது இரத்தம் வருமானால், அப்பொழுது அது சரீரப்பிரகாரமான இரத்தமாயிருக்கும். அப்படியானால் அவருடைய மாம்சப்பிரகாரமான சரீரம் இங்கே இருக்கிறது என்றும், அப்பொழுது இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்றும் அர்த்தமாகிறது. இயேசுவானவரோ, “அதை நம்பாதீர்கள், அவர்கள், ‘இதோ அவர் வனாந்திரத்தில் இருக்கிறார்’ என்றும், ‘அவர் இங்கிருக்கிறார்’ என்றும் கூறுவார்கள், அதை நம்பாதீர்கள். ஏனெனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்” என்றார். நான் அதைக் கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் சத்தமிட்டுக் கூறியிருக்கிறேன். 115 முடிவிலே மேற்குக் கரையில் என்னுடைய நெருங்கிய நண்பர், வயோதிப டாக்டர் கனடா என்பவர் எழும்பினார். மற்றொரு மனிதன், அதாவது இந்தச் செயல்களில் ஒன்றில், இதை துவங்கின அந்தக் குறிப்பிட்ட ஒரு மனிதனின் மேலாளராக இருந்தவர், அங்கே எழும்பி நின்று ஒரு மகத்தான பெரிய…அளித்து, “சுத்தமான எண்ணெயும், பரிசுத்த இரத்தம். நம்முடைய இரத்தம் இன்றைக்கு நிரூபித்துக் காட்டப்படும்” என்றார். அவர்கள் அந்த இடத்தில் கூட்டத்தைத் திரட்டினர். அப்பொழுது அவர் தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த வார்க்கச்சைக்குக் (Belt) கீழே இரண்டு ஊசிகளைக் குத்தி வைத்திருந்து, அது எப்படி உண்டாகிறது என்பதை நிரூபித்துக் காண்பித்தார். 116 நீங்கள் இந்த விரலில் ஊசியை குத்தினாலும் அந்த விரலை அழுத்தித் திருகினால் அல்லது கசக்கினாலொழிய, அது இரத்தம் கசியாது என்பதை எவருமே அறிவீர்கள். நீங்கள் ஒரு ஊசியினால் விரலில் குத்திச் சிறு துவாரமிட்டாலும் அதில் இரத்தம் கசியாது. ஏனென்றால் நரம்புகள் அங்கிருந்து மிகவும் ஆழத்திலேயே இருக்கின்றன. அவர் அவ்வாறு அதைச் செய்த போது, அவன் அதை எப்படிச் செய்தான் என்பதையே காண்பித்து விட்டார். 117 அவர் எண்ணெயை இதோ பின்னால் வைத்திருந்து, அதன் மேல் தன்னுடைய கரங்களை வைத்துக் கொண்டார். பின்னர் அவர் மேலே வந்து, “என்னுடைய கரத்தைப் பாருங்கள், இது முழுவதுமே சாதாரணமாக உள்ளது” என்றார். அதன்பின்னர் அவர், “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” என்று கூறினார். பின்னர் தன்னுடைய கரத்தை இந்தவிதமாக கீழே தொங்கவிட்டு அழுத்திக் கசக்கினார். நிச்சயமாகவே, அவருடைய விரல்களிலிருந்து இரத்தம் கசிந்து வந்தது. அப்பொழுது எல்லாருமே ஆரவாரமாய் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது, அவர் அதைத் தன்னுடைய தலையில் துடைத்துக் கொண்டார். அங்கே ஒரு சிலுவை இருந்தது. இவர் அதைச் செய்துகொண்டிருந்த அதே மனிதனோடு இருந்த காரணத்தால் அதைக் கூட்டத்தினருக்கு முன்பாக வெளிப்படுத்திக் காட்டினார்.…பின்னர் தன்னுடைய சட்டைப் பைக்குள் வைத்திருந்த எண்ணெய் முதலிய பொருட்களை எடுத்துக் காண்பித்தார். 118 ஒருவர் ஒரு சுவரின் மேல் ஓர் இருதயத்தை வரைந்து வைத்துவிட்டு, “இந்த சுவரானது இயேசுவின் இரத்தத்தைச் சுவாசிக்கிறது. அது இயேசுவின் இதயமாயிருக்கிறது” என்றும் கூறினார். அப்பொழுது ஒரு பெரிய உருவம் படைத்த வயோதிப டெக்ஸாஸ் நாட்டுக்காரர் பயப்படாமல் நடந்து சென்றார். அப்பொழுது அவர், “எவரேனும் அதைத் தொட்டால், அவர்கள் மரித்துப் போய்விடுவார்கள்” என்றும் கூறியிருந்தார். அவர்கள் அதனண்டைக் கயிறுகளைக் கட்டி வைத்திருந்தனர். எல்லாரும் அதனுடைய படங்கள் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருந்தனர். அதாவது அங்கே அந்தச் சுவரானது இரத்தம் கசியும் என்றும், ஓர் இருதயத்திலிருந்து இரத்தத்தை சுவாசிக்கும் என்று கூறியிருந்ததையும் அறிந்திருந்தனர். இந்த நபரோ உள்ளே நடந்து சென்று, மெல்லச் சபைக்குள்ளாகவே நழுவிச் சென்று, இவரும் இவருடைய மனைவியும், அந்தச் சுவரின் மேல் வரைந்து, தீட்டியிருந்த வண்ணத்தைக் கழுவி அழித்துவிட்டு மீண்டும் அங்கே திரும்பிவந்து உட்கார்ந்து கொண்டு, காத்திருந்தனர். பின்னர் மற்றவர்கள் உள்ளே வந்தனர். அப்பொழுது போதகரோ, “உங்களுக்குத் தெரியுமா? இயேசுவானவர் இங்கிருக்கிறபடியால் அதனை அழித்துவிட்டார்” என்றார். 119 அப்பொழுது இவரோ, “இயேசுவானவர் அதனோடு ஒன்றுமே செய்யவில்லை. நானேதான் அதை செய்தேன்” என்றார். அது உண்மை. 120 என்ன சம்பவித்துள்ளது? ஜனங்கள் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையின் மேல் உறுதியில்லாமலிருக்கிறதே அதற்குக் காரணமாயிருக்கிறது. வேதமோ, “அவர்கள் கிழக்கிலிருந்தும், மேற்குக்கும், வடக்கிலிருந்து தெற்குக்கும் செல்வார்கள். ஒரு பஞ்சம் உண்டாகும். ஆகாரக் குறைவினாலும், ஜலக்குறைவினாலும் உண்டாகிய பஞ்சமல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தை கேட்கக் கிடைக்காத பஞ்சமாயிருக்கும்” என்று கூறவில்லையா? நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்! 121 இந்த எல்லா பெரிய ஸ்தாபன சபைகளும் ஒன்று சேர்ந்து கூட்டிணைவாகிக் கொண்டிருக்கின்றன என்பதை இப்பொழுது நாம் காண்கிறோம். நீங்கள் ஒரு செய்தியை ஒலிபரப்ப வேண்டுமானால் அதற்கு முன்னர் நீங்கள் இந்தச் சபைகளின் கூட்டிணைவைச் சார்ந்தவர்களாயிருக்க வேண்டும் என்ற ஒரு நிலையை அது அடைந்துவிட்டது. இல்லையென்றால் நீங்கள் வானொலி ஒலிபரப்பிலிருந்து நீக்கப்படுவீர்கள். மகனே, அதைக் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதே. அவர்களுடைய மற்ற காரியங்களைக் குறித்தும்கூட கவலை கொள்ளாதே. ஏனென்றால் நீ அதைச் செய்வதற்கு முன்பு சபைகளின் கூட்டிணைவைச் சார்ந்திருக்க வேண்டும். நீ அதைச் செய்யும் போது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள மிருகத்தின் முத்திரையையே இந்த உலகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறாயேயன்றி வேறொன்றுமில்லை. அந்நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். அவை யாவும் எவ்வாறு ஒன்று சேர்ந்தாற்போல் கூட்டி இணைக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தீர்களா? 122 ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. உண்மையாகவே ஜீவனுள்ள தேவன் ஒருவர் உண்டு. உண்மையாகவே உண்மையுள்ள ஒரு கர்த்தர் உண்டு. உண்மையாகவே உண்மையுள்ள வார்த்தை ஒன்று உண்டு. உண்மையாகவே உண்மையுள்ள ஒரு சுகமளித்தல் உண்டு. இந்தக் காரியங்கள் யாவுமே உண்மையாயிருக்கின்றன. ஆனால், சகோதரனே, உன்னுடைய விசுவாசத்தை ஏதோ ஒரு சிறு உணர்ச்சிவசப்படுதலின் மேல், ஒரு சபை ஒழுங்கின் மேல், இராபோஜனத்தில் பங்கு கொள்வதின்பேரில், ஆவிக்குரிய கன்மலையிலிருந்து புசிப்பதின் பேரில் ஒருபோதும் அடிப்படையாகக் கொள்ளாதே. 123 நீங்களோ, “சகோதரனே நான் இதை அறிவேன். நான் தேவனை ருசித்துப் பார்த்திருக்கிறேன்” என்று கூறலாம். அது அப்படியே முற்றிலும் உண்மையாயிருக்கலாம். ஆனால் எந்தவிதமான ஒரு ஸ்தலத்திற்குள் அது விழுந்துள்ளது? அதுதான் அடுத்த காரியம். அதற்குள் எந்தவிதமான ஒரு வாளி உள்ளே வந்தது? “நீதி மற்றும் அநீதி”. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் இச்சித்ததுபோல் நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. 124 அவர்களுடைய இச்சை என்னவாயிருந்தது? இப்பொழுது கவனியுங்கள். நான் இன்னும் சற்றும் கூடுதலாக படித்து பொருளுணர்த்திக் காண்பிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால் நலமாயிருக்கும். …விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். 125 ஓ, “நீங்களோ, நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். நான் ஒரு விக்கிராதனைக்காரன் அல்ல” என்று கூறலாம். ஒரு நிமிடம் அப்படியே பொறுங்கள். நாம் அதை வார்த்தையினால் சோதித்துப் பார்ப்போமாக. நீங்களோ, “நான் ஒரு விக்கிரகத்தை ஆராதிக்க மாட்டேன்” என்று கூறலாம். அது நீங்கள் ஒரு விக்கிரகத்தை ஆராதிக்கிறீர்கள் என்று முழுமையாக பொருள்படுகிறதில்லை. அது நீங்கள் ஒன்றையும் செய்யாமல் பயனற்ற வகையில் பொழுதை கழிப்பதேயாகும். சபைக்கு சென்று, “ஆம், அது எல்லாம் சரிதான்” என்று கூறி பின்னர் வீட்டிற்கு திரும்பிச் சென்று, அதைக் குறித்து ஒன்றுமே செயல் புரியாமல் இருப்பதாகும். 126 சகோதரனே, ஒரு மீண்டும் பிறந்த மனிதனாலோ அல்லது ஸ்திரீயினாலோ அமைதியாக நிற்கமுடியாது. அவர்களுக்குள் ஏதோ ஒன்று உண்டு. அவர்கள் சாட்சிப் பகர வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அவர்களால் அமைதியாக இருக்கவே முடியாது. கவனியுங்கள். ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் (அவர்கள்) சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். 127 பவுல் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான்? திருஷ்டாந்தங்கள். அவர்கள் சபைக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள் முற்றிலும் ஒரு சரியான ஞானஸ்நானத்தை உடையவர்களாயிருந்தனர். ஒரு தடவை; முன் நோக்கி மூன்று முறைகள்; பின்பு பின்னோக்கி; பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்; இயேசு மாத்திரமே. அது என்னவெல்லாமாய் இருந்ததோ அப்படியில்லாமல், அவர்கள் ஒரு சரியான் ஞானஸ்நானத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் சரியாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தனர். நாமோ அதைப் போன்ற காரியங்களைக் குறித்தே வம்பும், கடுஞ்சினக் குமுறலும் கொண்டு வாதிடுகிறோம். அது என்ன நன்மையைச் செய்கிறது? நீங்கள் மூல உபதேசத்திலிருந்து விலகிச் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஞானஸ்நானத்தின் பேரில் நம்முடைய சபைகள் நம்மைப் பிரித்திருக்கின்றன. நிச்சயமாகவே. 128 ஆகையால் நீங்கள், “ஓ, அல்லேலூயா! நாம் பெற்றுள்ள ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை. அவர்கள் அவ்வளவாய் குளிர்ந்துபோய், சம்பிரதாயமான முறையில் உள்ளனர். தேவனுக்கு மகிமை, நான் தேவனுடைய உண்மையான மன்னாவைப் புசிக்கிறேன். அது சத்தியமுமாயிருக்கிறது என்பதை நான் அறிவேன்” என்று கூறலாம். அது முற்றிலும் உண்மைதான். ஆனால் அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? நீங்களோ, “சகோதரனே, நான்…எங்களுடைய சபையில் பரிசுத்த ஆவியானது உண்மையாகவே விழுகிறதே” என்று கூறலாம். அது நல்லதுதான், ஆனால் அது உள்ளே விழும்போது நீங்கள் ஒரு சரியான விதமான பாத்திரமாயில்லாதிருந்தால், அது உங்களுக்கு என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும்? நினைவிருக்கட்டும். 129 ஓ, நீங்களோ, “நான் உத்தமமாயிருக்கிறேன்” என்று கூறலாம். அவர்களும் அவ்வாறே இருந்தனர். அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு புறப்பட்டுச் சென்று மரணத்திற்காக தங்களுடைய கழுத்தையும்கூட நீட்டினர். நாம் செய்துள்ளதைப் பார்க்கிலும் அவர்கள் அதிகமாகவே செய்துள்ளனர். அது இதனோடு செய்யும்படியான ஒரு காரியத்தையும் பெற்றிருக்கவில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள். 130 வேதம், “அவர்கள் எனக்கு வீணாய் ஆராதனை செய்கிறார்கள். அவர்கள் எனக்கு வீணாய் ஆராதனை செய்கிறார்கள்” என்று கூறியுள்ளது. உண்மையாகவே முற்றிலும் வீணாய் ஆராதனை செய்கிறார்கள். அது எங்கே துவங்கினது? அது ஏதேன் தோட்டத்தில் காயீனிடத்திலிருந்தே சரியாகத் துவங்கினது. ஆபேல் தேவனை ஆராதித்ததுபோலவே காயீனும் அப்படியே ஆராதித்தான், ஆனால் அவன் அவரை வீணாய் ஆராதித்தான். ஆம் ஐயா, “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு.” 131 நீங்களோ, “நல்லது, அது ஏன்? இப்பொழுது நான் மனந்திரும்பியிருக்கிறேன். நான் ஏன் சரியாயிருப்பதில்லை? நான் மனந்திரும்பி விட்டேன். நான் மற்ற எந்த நபரைப் போலவும் அவ்வளவு நல்லவனாக இருக்கிறேன் என்றுதானே நான் கருதுகிறேன். நான் சபைக்குச் செல்கிறேன். நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன். நான் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறேன். நான் ஒரு நல்ல பிரசங்கத்தை கேட்க விரும்புகிறேன். நான் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறேன். நான் அதை வாசிக்க விரும்புகிறேன். நான் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக்கூட பெற்றுக் கொள்கிறேன். அல்லேலூயா, என்னால் தீர்க்கதரிசனம் உரைக்க முடிகிறது. என்னால் அந்நிய பாஷைகளில் பேச முடிகிறது, நான் எல்லா காரியங்களையும் செய்திருக்கிறேன். நீங்களோ, ‘அது வீணாயிருக்கிறது’ என்று பொருட்படுத்தி கூறுகிறீர்களா?” என்று கேட்கலாம். 132 இப்பொழுது, அது வீணாயிருக்கிறது என்று நான் கூறிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அது வீணாயிருக்கக் கூடும் என்ற சாத்தியம் உண்டு. அது உண்மை. அது நீங்கள் அங்கே உள்ளே என்னவாயிருக்கிறீர்கள் என்பதை பொறுத்ததன் பேரிலேயே உள்ளது. அது உண்மையே, இதை பெற்றுக் கொண்டிருக்கிற நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்ததாகவே உள்ளது. நீங்கள் மீண்டும் பிறக்கவில்லையென்றால், உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் உண்மையாகவே இல்லையென்றால், அப்பொழுது அது வீணாயிருக்கிறது. எல்லா ஆசீர்வாதங்களையும் நான் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தாலும் அது வீணாயுள்ளது. இப்பொழுது அப்படியே இன்னும் ஒன்றை பார்ப்போம். அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. 133 “வேசித்தனம்பண்ணுதல்”, அது ஆவிக்குரிய வேசித்தனங்களாயிருக்கின்றன. நமக்கு நேரம் இருந்தால்…ஞாயிறு வேத பாட பள்ளி முடிவுற்று விட்டது. ஆவிக்குரிய வேசித்தனமாயிற்றே! அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைப்பாராதிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். 134 முறுமுறுத்தல், இச்சித்தல், உங்களுடைய மார்க்கத்தோடு உலகத்தைக் கலத்தல், வெளியே…செல்லுதல், தேவன் தூய்மையை, உண்மையாகவே தூய்மையானதையே விரும்புகிறார். 135 இந்தக் காலையில் நான் பேசிக்கொண்டிருந்தேன். நான், “என்ன…” என்று எண்ணினேன். இப்பொழுது முடிக்கையில் நான் இதைச் சிந்தித்தேன். “ஒரு மனிதனுடைய ஜீவியத்தில் இனிமையானது எது? அவன் சோர்வுற்று, களைப்புற்று தன்னுடய கரத்தில் சிறு வாளியோடு, நாள் முழுக்க உழைத்து விட்டு அல்லது உழுதுவிட்டு அல்லது அவன் வேறெந்த பணியாகிலும் செய்துவிட்டு வீட்டிற்கு வரும்போது, உள்ளே நடந்து வரும்போது ஓர் அழகான மனைவி அவனை வாசலண்டையில் சந்திப்பதைப் பார்க்கிலும் இனிமையானது எது? அவனுடைய மடியிலே ஓர் நிமிடம் அமர்ந்து, அவனுடைய புருவத்தை சற்று தடவிட்டு கன்னத்திலே அவனை முத்தமிட்டு, அவன்மீது அவளுடைய கரங்களை சுற்றி போட்டுக் கொண்டு, ‘அன்பே, நீர் களைப்புற்றிருக்கிறீர் என்பதை நான்—நான் அறிவேன், நீர் மிகவும் கடினமாக வேலை செய்திருக்கிறீர்’ என்று கூறுவாளே. அப்பொழுது அது அவனுக்கு ஆறுதலை அளிக்கும்.” 136 அவன் மீது சுற்றியுள்ள அந்த கரம் முற்றிலும் அவனுடையதாயிருக்கிறது என்பதை அவன் எப்படி அறிந்திருக்கிறான்? அது அவனுடையதாயிருக்கிறது. அது வேறெந்த மனிதனின் மீது போடப்பட்டதோ அல்லது அதற்கு வேறெந்த வாஞ்சையோ ஒரு போதும் கிடையாது. அவனுடைய கன்னத்தில் இடப்பட்ட அந்த முத்தமானது உண்மையான, தூய்மையான, அவனை அப்படியே நேசிக்கிற, அவனை மட்டுமே நேசிக்கிற பரிசுத்தமான இருதயத்தில் இருந்து வந்ததாயிருக்கிறது. அது…எப்படியாய்…உங்களை செயல்படச் செய்கிறது, அது நீங்கள் உங்களுடைய மார்பை வெளியே தள்ளியவாறு நிமிர்த்திக் கொண்டு, “ஓ, நான் மொத்தத்தில் அவ்வளவாய் களைப்புற்றிருக்கவில்லை” என்று உங்களைக் கூறச்செய்யும் என்பதை நான் அறிவேன். புரிகின்றதா? அதுதான் அது. அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறது. 137 நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். ஆனால் அவனுடைய கன்னத்தின் மேல் இடப்பட்ட அந்த முத்தத்தில் அவன் நம்பிக்கை கொள்ளாதிருந்தால் என்னவாயிருக்கும்? அது வேறொரு மனிதனுடைய கன்னத்தின் மேல் இடப்பட்டிருக்கலாம். அவன் மீது சுற்றப்பட்டுள்ள அந்தக் கரங்கள் எல்லோரையும் தழுவியிருந்து, இன்னும் அதே விதமாகச் செய்ய வாஞ்சை கொண்டிருந்தால் என்னவாயிருக்கும்? அது அவ்வளவு பொருள்படாதே. அப்பொழுது அது அவ்வளவாய் கவனத்தைத் தன் பக்கம் கொண்டிருக்காதே. ஏன்? 138 இப்பொழுது அவர்கள் ஆதியிலே ஒன்றாயிருந்தனர். தேவன், அவர் மனிதனை உண்டாக்கினபோது, அவர் அவனை ஓர் இரட்டைத் தன்மைக் கொண்ட நபராகவே உருவாக்கினார். ஆணும் பெண்ணுமாகவே உண்டாக்கினார். அவர் அவனை மாம்சத்தில் வேறுபிரித்தார்; இங்கே பூமியின் மேல் மாம்சத்தில் அவனை வைத்தார். பெண்மைக்குரிய பாகம் இப்பொழுதும் ஆவியில் அப்படியே இருந்தது. 139 நண்பர்களே, பாருங்கள், தேவன் மிகவும் கவனமுள்ளவராயிருந்தார். ஓ, எப்படியாய் இது…இது உங்கள் மனதை விட்டுச் செல்ல அனுமதிக்காதீர்கள். தேவன் ஒரு கைப்பிடியளவு மண்ணை எடுத்து ஏவாளை ஒருபோதும் உருவாக்கவில்லை. அவள் ஒரு வித்தியாசமான சிருஷ்டியாயிருந்தாள். அவள் ஒரு சிருஷ்டியாயில்லை. அவள் ஒரு உப உற்பத்தியாயிருக்கிறாள். தேவன் ஆதாமின் இருதயத்திற்குள் சென்று, இந்த விலா எலும்பை, அவனுடைய இருதயத்தின் கீழிருந்த அந்த எலும்பை வெளியே எடுத்து, ஒரு விலா எலும்பை எடுத்து ஒரு மனைவியை உண்டு பண்ணினார். ஆதாமினுடைய அதே ஆவியின் பாகம் ஸ்திரீக்குள் இருந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாயிருந்தனர்; ஆத்துமா, சரீரம், ஆவியில் அவர்கள் ஒன்றாயிருந்தனர்; அவர்கள் ஒன்றாயிருத்தலில் பரிபூரணமாயிருந்தனர். ஒரு உண்மையான ஸ்திரீ…ஒரு உண்மையான கணவனும், ஒரு உண்மையான மனைவியும், அவர்கள் ஒன்று சேர்ந்தவர்களாய் ஒன்றாயிருக்கிறார்கள். 140 அது எதற்கு ஒரு மாதிரியாயிருக்கிறது? அவருடைய மார்பிலிருந்து வெளியே வந்த கிறிஸ்துவிற்கே! ஒரு உப—உற்பத்தியாயல்ல, ஒரு மெத்தோடிஸ்டாய் அல்ல, அல்லது ஒரு பாப்டிஸ்டாய், அல்லது ஒரு பெந்தேகோஸ்தே ஸ்தாபன குஞ்சு பொரிக்கும் கருவியில் இருந்த வந்த கோழிக்குஞ்சாய் அல்ல, இல்லை, ஐயா. ஆனால் அவருடைய சொந்த இருதயத்திலிருந்து வெளியே வந்தோம். அவர் அவளால் இருக்க முடிந்தளவு தூய்மையாயும், உண்மையாயும் இருக்கும்படியான ஓர் இனிய இருதயமாகவே அவளை எடுத்தார். அவள் லீலி புஷ்பத்தைப் போன்று அவ்வளவு உண்மையாயிருக்கிறாள். பாருங்கள்… 141 சாலொமோன், “என் பிரியமே வா, நாம் மாதுளஞ்செடிகளுள்ள தோட்டத்திற்குள் நடந்து செல்வோம். சம்போகமாயிருப்போம்” என்று கூறினதைத் திரும்ப நோக்கிப் பார்ப்போம். ஒரு உண்மையான விசுவாசித் தன்னுடைய கரங்களை ஒரு தூய்மையான இருதயத்தோடு விரிக்கும்போது, அவன் கிறிஸ்துவை பற்றிக் கொள்ளும்போது, அந்தக் கிறிஸ்து நேசரின் நேசமானது அவனுடைய மார்பிற்குள்ளாக செல்கிறது. அது அவருடைய மனைவியாயுள்ளது, அது அப்படியே ஒரு உண்மையான மனைவிக்கு ஒரு கணவன் செய்கிறது போன்றேயுள்ளது. 142 நாம் எந்த மாதிரியான ஒரு நபராய் இருக்க வேண்டும்? நாம் வேசியாயிருந்துகொண்டு, கிறிஸ்துவோடு விளையாடிக் கொண்டிருக்கிறோமா? நாம் ஏதோ ஒரு சிறு காரியத்தின் பேரில் சார்ந்து கொண்டு, உலகத்தின் பின்னேயும், உலகக் காரியங்களின் பின்னேயும் உலகப்பிரகாரமான சிந்தை கொண்டவர்களாக ஓடிக்கொண்டு, உண்மையான அன்பில்லாமல், நாம் கொண்டிருக்க வேண்டிய பக்தியையுடையவர்களாய் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறோமா? உங்களால் அதை யூகித்துப் பார்க்க முடிகிறதா? என்னே! 143 சகோதரனே, உங்களுடைய மனைவியானவள் வந்து உங்களுடைய மடியின் மீது தன்னுடைய சருமத்தில் உண்டான சிறு தவிட்டு நிறப் புள்ளிகளைக் கொண்டவளாய், தலை முடியின் ஓரங்கள் கலைந்திருக்க, தன்னுடய உட்பாவாடையின் அடியோர ஆடைத்தொங்கலோடு, இழைப்பட்டையினால் இடுப்பைச் சுற்றிலும் உள்ள இழைக்கச்சையின் பின்னலோடு, அவளுடையக் கூந்தலை முழுமையாக வாரி முடிந்திருக்க, அதில் கலைந்த சில முடிகள் உங்களுடைய முகத்தில் கூச்சிடும் உணர்வளிக்க, அதைப்போன்று வந்து அமருவதை உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா? அப்பொழுது அவள் உங்கள் மீது அவளுடைய கரத்தைப் போட்டுக்கொண்டு, “ஓ, ஜான் நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். [சகோதரன் பிரான்ஹாம் பலமுறை முத்தமிடுவதைப் போன்ற சத்தத்தை உண்டு பண்ணுகிறார்—ஆசி.] “நான் உம்மை நேசிக்கிறேன்.” அப்பொழுது உடனே நீங்கள் தவறான ஏதோக் காரியம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவளில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவள் எவ்வளவு அழகாய் காணப்பட்டாலும், அவள் எவ்வளவு சரீர பொருத்தமுள்ளவளாயிருந்தாலும் அதைப் பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள், நீங்கள் அவளிடத்தில் பரிபூரண நம்பிக்கை கொண்டிருக்கவில்லையென்றால், அப்பொழுது ஏதோ காரியம் தவறாயுள்ளது. அது தன்னுடைய மனைவிக்காக ஆவல் கொண்டுள்ள ஒரு மனிதனை திருப்திப்படுத்துகிறதில்லை—அது திருப்திப்படுத்துகிறதேயில்லை. 144 இப்பொழுது உலகத்தோடு வெறுமனே வீணாகக் காலத்தை செலவழித்துக்கொண்டு, உலகத்தோடு சிக்குண்டு, பின்னர் கீழே முழங்காற்படியிட்டு, “ஓ, கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறுகின்ற உங்களைக் குறித்து சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அது ஒரு எரிகின்ற, யூதாஸினுடைய, மாய்மாலக்காரனுடைய முத்தமாயிருக்கிறது. அது உண்மை. இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது ஓர் எழுப்புதல் வந்து கொண்டிருக்கிறது. புரிகின்றதா? 145 ஓ, நீங்கள் விவாக மோதிரத்தை அணிந்திருக்கலாம், அது உண்மைதான், ஆனாலும் நீங்கள் மனைவியாயிருக்கவில்லை. ஓ, நீங்கள் ஒரு ஸ்திரீயாயிருக்கலாம். நீங்கள் அந்த வீட்டின் பெண்மணியாயிருக்கலாம். ஆனால் நீங்கள் அந்த விதமாக நடந்து கொண்டிருப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் ஓர் மனைவியாயிருக்கவில்லை. 146 நீங்கள் உங்களுக்குள் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் அவரை நேசிக்கவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவன் அல்ல, நீங்கள் கிறிஸ்துவிற்கான ஓர் உண்மையான அசலான உற்பத்திப் பொருளாயிருக்கவில்லை. 147 நீங்கள் அழகாகக் காணப்படுகின்றீர்களா, நீங்கள் அழகாகக் காணப்படவில்லையா என்று நான் கவலைப்படுகிறதில்லை. நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் உங்களையே வெளிப்படுத்துகிறீர்கள். அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் ஒன்றாயிருக்கிறீர்கள். அப்படித்தான் கிறிஸ்துவும் அவருடைய சபையும் உள்ளது. ஸ்தாபனத்தின் மூலமாயல்ல, ஞானஸ்நானத்தின் மூலமாயல்ல, உணர்ச்சிவசப்படுதல்களின் மூலமாயல்ல, தேவனுடைய இருதயத்திலிருந்து உண்டான ஓர் உண்மையான அன்பினால் நீங்கள் கொள்ளப்பட்டீர்களேயன்றி, வேறொன்றினாலுமல்ல. அவர் காயப்பட்டபோது, அவர் உங்களைக் கிரயத்திற்குக் கொண்டார். உங்களுடைய அன்பு, உங்களுடைய உண்மை, உங்களுடைய உத்தம நம்பிக்கையானது நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை நீரூபிக்கிறது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிந்து கொண்டீர்களா? நீங்கள் சருமத்தில் பழுப்பு நிற புள்ளிகளை முழுவதும் கொண்டிருந்தாலும் அல்லது நீங்கள்… 148 என்னுடைய மனைவி அவளுடைய தலைமுடியை ஒருபோதும் வாரிக்கொள்ளாமலிருந்தாலும் அவள் ஓர் அழகான ஆடையை அணிந்திராவிட்டாலும், அல்லது ஒருபோதும்…நான் கவலைப்படுகிறதில்லை. ஆனால் அவள் என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறாள். அவளுடைய உண்மையுள்ள விசுவாசத்தையும், அவளுடைய நற்குணத்தின் காரணமாகவும் நான் அவளைப் புகழுகிறேன். அவள் என்னவாயிருக்கிறாளென்றால், அந்தவிதமாகத்தான் அவள் இருக்கிறாள். 149 கிறிஸ்தவ புருஷர்களாயும், ஸ்திரீகளாயும் இருக்கிற காரணத்தினால் அந்தவிதமாகத்தான் நாம் தேவனுடைய பார்வையில் இருக்கிறோம். அது நம்மால் மிகச் சிறந்த சபைக்கு செல்லமுடியும் அல்லது நம்மால் மிகச்சிறந்த ஆடையை உடுத்திக் கொள்ளமுடியும் அல்லது நம்மால் இதை அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது நம்மால் இதைச் செய்ய முடியும் அல்லது நம்மால் இதில் சவாரி செய்ய முடியும் அல்லது நம்மால் இதைச் செய்ய முடியும், அதைச் செய்ய முடியும் என்ற காரணத்தினால் அல்ல. அது இதனோடு எந்த ஒரு காரியத்தையும் செய்கிறதில்லை. அது நம்முடைய உண்மையான நற்குணமாயும், கிறிஸ்துவண்டை கொண்டுள்ள நம்முடைய அன்புமாயிருக்கிறது. அதுதான் பிறப்பாயிருக்கிறது. அதுதான் வருகின்ற காரியமாயிருக்கிறது. 150 “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் ஒன்றுமில்லை. நான் அன்னதானம்பண்ணினாலும், நான் என் பொருட்களைக் கொடுத்தாலும், நான் இதைச் செய்தாலும், அதைச் செய்தாலும், அதைச் செய்தாலும் நான் ஒன்றுமில்லை”. அந்த உண்மையான, அசலான அன்பும், உண்மையான உத்தமமும் அங்கில்லாதிருக்குமாயின் அப்பொழுது கிறிஸ்துவானவர் உங்களால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்றோ, அதைப் போன்று உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் குறித்தா, எதைக் குறித்து கவலை கொள்கிறார்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்க்கமாட்டீர்களா? 151 இது ஞாயிறு வேதபாட பள்ளியாயிருக்கிறது, நினைவிருக்கட்டும், அது உங்களுக்கு ஒரு பாடமாய் இருக்கிறது. உண்மையான ஸ்திரீ அவளுடைய கணவனுக்கு இருப்பதுபோல கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் முதன்மை ஸ்தானம் கொண்டிருக்கட்டும், வேறெந்தக் கரங்களும் அவளை எங்குமே தொட முடியாது. வேறெந்த முத்தங்களும் கிடையாது. அது எவ்வளவுதான் மகிழ்ச்சியூட்டக்கூடியதாக காணப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் அவள் தன்னுடைய தலையை திருப்பிக் கொள்வாள். அவள் ஒரே ஓர் அன்பைத்தான் பதித்து வைத்திருக்கிறாள். அது அவளுடைய கணவனுக்கானதாயுள்ளது. அது உண்மையே. அந்த மனிதன் அழகாக இருந்தாலும், அவனுடைய தலைமுடியானது பளபளப்பாக்கப்பட்டு, அழகாக வாரி மழமழப்பாக்கப்பட்டு காணப்பட்டாலும், அவன் தன்னை எவ்வளவுதான் கட்டுப்பாட்டோடுகூடிய சரியான தேக அமைப்பைக் கொண்டிருந்தாலும் பொருட்படுத்தவே மாட்டாள். இல்லை ஐயா. அதனால் ஒரு காரியமும் கிடையாது. அவள் அந்தக் கணவனையே நேசிக்கிறாள். அது அவனை மாத்திரமே அவள் நேசிக்கிறாள் என்பதாயுள்ளது, அவள் தன்னுடைய எல்லா நற்குணங்களையும், அவளுடைய எல்லா முத்தங்களையும் பறி கொடுக்கிறாள். அவளுடைய எல்லா பாசங்களையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும், தன்னுடைய கணவனுக்கு, அவனுக்கு மட்டுமே உரித்தாக்குகிறாள். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகின்றதா? 152 நீங்கள் உலகத்தின் எல்லாக் காரியங்களையும் விட்டு விடுங்கள். அது எவ்வளவு நல்லதாகக் காணப்பட்டாலும், அது எவ்வளவு அழகாகக் காணப்பட்டாலும், அது எவ்வளவு மனதைக் கவரக்கூடியதாகக் காணப்பட்டாலும், கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பது உங்களுடைய நற்பண்பினால் மதிப்பிடப்படுகிறது. 153 ஆகையால் நீங்களோ, “ஓ, அல்லேலூயா! நான்—நான் அதைப் பெற்றுக் கொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் இதைச் செய்தேன். அல்லேலூயா!” என்று கூறலாம். அதன் பின்னரோ ஒரு சண்டையிட போதுமான கோபங் கொண்டிருப்பீர்கள். சகோதரனே, நான் உனக்குச் சொல்கிறேன், அது கிறிஸ்துவானவர் மரியாதையளிக்கிற நற்பண்பையே எடுத்து விடுகிறது. 154 “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும்; நான் இரண்டு கரங்களிலிருந்தும் இரத்தத்தை வடியச் செய்தாலும்; நான் ஆவியில் சத்தமிட்டாலும், நடமாடினாலும்; நான் தேவனுடைய வார்த்தையைப் புசித்தாலும், அதை நேசித்தாலும்; நான் மற்றவர்கள் பானம்பண்ணுகிற அதே ஆவிக்குரியக் கன்மலையிலிருந்துப் பானம்பண்ணினாலும்; நான் மற்றவர்களைப்போல அவ்வளவு சத்தமாய் என்னுடைய கரங்களை தட்டினாலும்,” [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒன்று சேர்த்து இரண்டு முறை தட்டுகிறார்—ஆசி.] “என்னால் முதலைக் கண்ணீர் வடிக்க முடிந்தாலும், என்னால் இவை எல்லாவற்றையும் செய்ய முடிந்தாலும் சரி. ஆனால் அந்த உண்மையான, அசலான, கிறிஸ்துவண்டை உண்மையான கிறிஸ்தவனின் நற்பண்பினைக் கொண்டிராதவனாயிருப்பாயானால், அப்பொழுது நீ ஒரு சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஒரு ஓசையிடுகின்ற கைத்தாளம் போலவும் இருப்பாய்.” பவுல் இதைக் குறித்து தன்னுடைய சபையை, கொரிந்து சபையை, பித்துக்கொள்ளித்தனம் கொண்டு மனம் போனப்போக்கில் எல்லா விதமான காரியங்களிலும் கலப்படமுற்றிருந்த சபையை எச்சரித்துக் கொண்டிருந்தான். 155 நண்பர்களே, நான் உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். நான் அங்கே நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்காகப் பதில் கூறவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுடைய இரத்தப்பழி என் மீது இராது. நீங்கள் வேறெந்தக் காரியத்திற்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாயிருந்தாலும் கவலையில்லை. கிறிஸ்துவிற்கு உண்மையுள்ளவர்களாயிருங்கள். நாம் ஜெபிக்கும்பொழுது அதை நினைவில் கொள்ளுங்கள். 156 ஸ்தோத்திரிக்கபட்ட பரலோகப் பிதாவே, தற்பொழுது இந்த ஸ்தலத்தில் இப்பொழுதே நாங்கள் வந்து எங்களுடைய எல்லாத் தவறுகளையும் அறிக்கை செய்கிறோம். ஓ, நீர் இரக்கமுள்ளவராய், இரக்கமுள்ள தேவனாயிருக்கிறீர். எங்களுடைய இருதயங்களுக்குள்ளே நீர் நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களுடைய தலைகள் மண்ணை நோக்கியவாறு வணங்கியிருப்பதோடு, நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், வயோதிப மனிதரின் இருதயங்களுக்குள்ளாகவும், வயோதிப ஸ்திரீகளுடைய இருதயங்களுக்குள்ளாகவும், நடுத்தர வயதுடையோரின் இருதயங்களுக்குள்ளாகவும், வாலிபர்களின் இருதயங்களுக்குள்ளாகவும், சிறு பிள்ளைகளின் இருதயங்களுக்குள்ளாகவுங்கூட நோக்கிப் பாரும், நாங்கள் எங்களையே சோதித்தறிவோமாக. 157 நல்ல வெள்ளி மற்றும் ஈஸ்டர் உயிர்த்தெழுதல் போன்றவற்றைக் கொண்டாடுகின்ற அந்தப் பரிசுத்த வாரத்தை நாங்கள் அணுகிக்கொண்டிருக்கிறோம். இந்த வருடத்தில் நாங்கள் சபைக்கு உண்மையாயிருந்தாலும், நாங்கள் இராபோஜனத்தி பங்கு கொண்டிருந்தாலும், நாங்கள் ஆரவாரமிட்டிருந்தாலும், நாங்கள் அனேகக் காரியங்களைச் செய்திருந்தாலும், ஆனாலும் ஓ, தேவனே என்னுடைய இருதயத்திற்குள்ளாக நோக்கிப் பாரும். நான் எனக்காகவே பேசுகிறேன். என்னுடைய இருதயத்திற்குள்ளாகவும், இக்காலையில் இங்குள்ள ஜனங்களின் இருதயத்திற்குள்ளாகவும் நோக்கிப் பார்த்து, கர்த்தாவே, எங்களைச் சோதித்தறியும். கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துப் போடுகிற ஏதாவது காரியம் இருக்குமாயின், ஓ, தேவனே அதை எடுத்துப்போடும். அது சோம்பேறித்தனமாயிருந்தாலும், வெறுமனே போதாமையாயிருந்தாலும், அது என்னவாயிருந்தாலும், அது எனக்கு தெரியாது. ஆனால் தேவனே அதை எங்களிடத்திலிருந்து எடுத்துப்போடும். ஓ, நாங்கள் இங்கே யுத்த நேரத்தில் தேவனுக்கு எதிரியாயிருந்து, அவரால் அழிக்கப்பட்டுப்போக, அழிக்கப்பட வேண்டுமென்று விரும்பவில்லை. 158 ஓ தேவனே, எங்களுடைய இருதயங்களுக்குள்ளாக நோக்கிப் பாரும். எங்களுக்குள் ஏதாவது பொல்லாதக் காரியம் காணப்படுமாயின், இந்தக் காலையில், உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களைச் சோதித்தறிவதை நாங்கள் காண்போமாக. பிதாவே, அவ்விதமாய் ஏதாவது காணப்படுமாயின், அதை எடுத்துப்போடும். நாங்கள் இப்பொழுது அதைப் பீடத்தின் மேல் வைத்துவிட்டு நடந்து செல்லும்படியாக, அதை அங்கேயே வைக்கிறோம். அது சோம்பலாயிருந்தாலும், அது கோபமாயிருந்தாலும், அது அக்கறையின்மையாயிருந்தாலும், அது புறக்கணிப்பு மனப்பான்மையாயிருந்தாலும், அது என்னவாயிருந்தாலும், அது காழ்ப்புணர்வாயிருந்தாலும், அது தீங்கு செய்யும் எண்ணமாயிருந்தாலும், அது சண்டை சச்சரவாயிருந்தாலும், அது என்னவாயிருந்தாலும், ஓ தேவனே, இன்றைக்கே அதை எங்களிடத்திலிருந்து எடுத்துப்போடும். 159 வருகின்றதான இந்த எழுப்புதலில் நாங்கள் மிகவும் கடினமாய் முயற்சித்துள்ள இங்குள்ள இந்தச் சிறு சமுதாயத்திலிருந்து அனேகர் வந்து இரட்சிக்கப்படும்படியாய் கர்த்தாவே, நாங்கள் உம்முடைய கவர்ந்திழுக்கும் வல்லமையினால் அவ்வளவாய் அப்படியே நிறைந்திருப்போமாக. பத்து வருடங்களில் நான் நடத்தியிருக்கிற கூட்டங்களில் இப்பொழுதுதானே முதல் எழுப்புதல். இப்பொழுது எங்களுடைய இருதயங்களில், அந்த உண்மையான, உண்மையான ஆவியை நீர் தந்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 160 அது நித்தியத்திற்காக அங்கே நங்கூரமிடப்படுவதாக. கர்த்தாவே, இதை அருளும். விவாகமான ஜனங்களாகிய நாங்கள், எங்களுடைய மனைவிகளை எந்த விதத்தில் நடத்த வேண்டும் என்றும், நாங்கள் எப்படி உண்மையாயிருக்க வேண்டும் என்றும், அல்லது எங்களுடைய மனைவிகள் எங்களுக்கு எப்படி உண்மையாயிருக்க வேண்டும் என்பதை நாங்களே எங்களைச் சோதித்தறிந்துக் கொள்ளும்படி செய்யும். எங்களுடைய வீட்டில் அந்த விதமான ஏதோ ஒரு காரியம் சம்பவிக்குமாயின், நாங்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை இந்தக் காலையில் எங்களுடைய இருதயங்களில் நாங்கள் புரிந்து கொள்வோமாக. அதன்பின்னர் நாங்கள் எங்களுடைய நேசங்கள் உம்மண்டை நோக்கியவாறு திரும்ப “ஓ தேவனே, என்னண்டை இரக்கமாயிரும்” என்று கூறுவோமாக. 161 ஓ, மனைவியானவள் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு ஒருமுறை அருகில் வந்து, அவளுடைய கரத்தை என் மீது போட்டு, “அருமையானவரே, நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறிவிட்டு நடந்து செல்வாளேயானால், ஓ, அவள் என்னை எப்படியோ புறக்கணித்துக் கொண்டிருந்தாள் என்பது தென்படும். அப்பொழுது ஏதோக் காரியம் எப்படியும் தவறாயிருந்தது என்பதும் தென்படும். தேவனே, அது ஒருக்கால் ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரே முறை நாங்கள் சபைக்கு செல்லும்போதோ, நாங்கள் ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுப்பதாய் உள்ளது. ஓ, எங்களுடைய அன்பையும், எங்களுடைய—எங்களுடைய—எங்களுடைய சம்பாஷணையையும், நீர் எல்லா நேரங்களிலுமே விரும்புகிறீர். எங்களுடைய நினைவுகளும், எங்களுடைய இருதயத்தின் யோசனைகளும் உம்மேலே தரித்திருக்க வேண்டுமென்று விரும்புகிறீர். கர்த்தாவே இதை அருளும். 162 ஓ, உலகத்தின் காரியங்கள் குருடாக்கப்பட்டு, அவ்வளவாய் அக்கறையற்றதாக்கப்பட்டு எங்களுடைய இருதயங்களை உம் மீது சரியாக வைத்துக் கொள்ளுவோக. கர்த்தாவே, இதை அருளும். இப்பொழுதே எங்களுக்கு செவிகொடும். இந்த ஆராதனையின் மற்ற பாங்களில் எங்களை ஆசீர்வதியும். நாங்கள் கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 163 இப்பொழுது கர்த்தர் உண்மையாகவே உங்களை நன்கு ஆசீர்வதிப்பாராக. நான்…அங்கே ஞாயிறு வேதபாட பள்ளி கலைந்து சென்றுவிட்ட பிறகு, நான் கூடுதலாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். நான் இந்தக் காரியங்களைக் கூறவில்லை. இது தேவனுடைய வார்த்தையிலிருந்து வந்ததாயுள்ளது. அவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாக இருந்தன. அவைகள் திருஷ்டாந்தங்களாயிருக்கின்றன. நண்பனே, இப்பொழுது ஆராய்ந்து பார். 164 உங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்த மனைவியானவள் ஒரு காட்டிக்கொடுப்பவளாயிருந்தாள் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், அப்பொழுது நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். சற்று நேரம் அதைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? 165 இப்பொழுது நீங்கள் தேவனண்டை வரும்போது, ஒரு காட்டிக் கொடுப்பராயிருக்கிறீர்களா? அதை செய்யாதீர்கள். நாம் உண்மையுள்ளவர்களாயிருப்போமாக. நீங்கள் ஓர் உணர்ச்சி வசப்படுதலை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆகாயம் முழுவது உண்மையான, அசலான தேவனுடைய அன்பினால் நிறைந்திருக்கும்பொழுது, நீங்கள் வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் அசலானதையே பெற்றுக்கொள்ள முடியும்போது, நாம் ஏன் ஒரு மாற்றுப் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும்? அது உங்களுக்கானதாயுள்ளது. நான் இப்பொழுது ஆராதனையை நம்முடைய போதகரிடத்தில் சமர்ப்பிக்கும்போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 166 இந்த வாரம் பொது மக்களுக்கான மற்றும் ஏறக்குறைய இங்குள்ள சுற்றுவட்டார சிறு பட்டணங்கள் அனைத்திற்குமான சிறு எழுப்புதல் உள்ளதை மறந்து விடாதீர்கள். நீங்கள் உங்களுடைய தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, எவரையேனும் அழைத்து, அங்கு வரும்படி அவர்களிடம் சொல்லுங்கள். நாம் பீட அழைப்புகளையும் விடுக்கவுள்ளோம். இந்த வாரம் கர்த்தருக்குள் ஒரு நல்ல நேரத்தை எதிர் பார்க்கிறோம். 167 நாங்கள் உங்களை அடுத்து வருகின்றதான புதன்கிழமை இரவு சந்திக்கும்வரை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.